ADVERTISEMENT

துபாய், ஷார்ஜாவை விட்டு அஜ்மானிற்கு இடம்பெயரும் குடியிருப்பாளர்கள்… 50% அதிகரித்த குத்தகை ஒப்பந்தங்கள்..

Published: 30 Mar 2025, 3:05 PM |
Updated: 30 Mar 2025, 5:03 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் குத்தகை ஒப்பந்தங்களில் (lease contract) குறிப்பிடத்தக்க 50% அதிகரிப்புடன், குடியிருப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இருவருக்கும் ஒரு பிரபலமான தேர்வாக அஜ்மான் மாறி வருகிறது. அஜ்மான் நகராட்சி மற்றும் திட்டமிடல் துறையானது கடந்த ஆண்டின் மொத்த வாடகை பரிவர்த்தனை மதிப்பை 4.929 பில்லியன் திர்ஹம்ஸ் என அறிவித்துள்ளது. இது 2022 உடன் ஒப்பிடும்போது 1.646 பில்லியன் திர்ஹம்ஸ் அதிகரித்துள்ளது. இந்த உயர்வு அஜ்மானின் மலிவு விலை, நவீன வசதிகள் மற்றும் வலுவான சமூக வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது என்றும் இதனால், பல புதிய குடியிருப்பாளர்கள் எமிரேட்டில் குடியேற ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அஜ்மான் நகராட்சியின் இயக்குநர் ஜெனரல் அப்துல் ரஹ்மான் அல் நுவைமி அவர்கள் பேசுகையில், குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அஜ்மான் ஒரு முதன்மையான இடமாக விரைவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்பான மற்றும் சிறந்த வாழ்க்கைச் சூழலுக்கான அனைத்து அத்தியாவசிய கூறுகளையும் அஜ்மான் எமிரேட் வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பாளர்களின் கருத்து

2023 இல் துபாயிலிருந்து அஜ்மானுக்கு குடிபெயர்ந்தவர்கள் கூறுகையில், அஜ்மான் எமிரேட்டின் மலிவு விலை மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாராட்டியதுடன், யாஸ்மின் போன்ற பகுதிகளில் வளர்ச்சி மற்றும் எளிதான கட்டணத் திட்டங்கள் கிடைப்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஷார்ஜாவிலிருந்து குடிபெயர்ந்த ஒரு குடியிருப்பாளர், உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் அஜ்மானின் வளர்ச்சியைப் பாராட்டியுள்ளார். ஷாப்பிங், பொழுதுபோக்கு பகுதிகள் மற்றும் மென்மையான ஆன்லைன் பரிவர்த்தனை செயல்முறைகள் வசதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரபலமாகி வரும் அஜ்மான்

குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அஜ்மானின் ரியல் எஸ்டேட் சந்தை செழித்து வருவதாகவும், எமிரேட்டின் மூலோபாய இருப்பிடம் மற்றும் நெகிழ்வான விதிமுறைகள் உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாகவும் ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

மேலும், பரிவர்த்தனைகளை விரைவாகவும் திறமையாகவும் செய்ய செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் டிஜிட்டல் அமைப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும் அஜ்மான் முனிசிபாலிட்டி வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்று கூறப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டில், நகராட்சி 100,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு ஒப்பந்த பரிவர்த்தனைகளையும் ஆயிரக்கணக்கான வணிக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களையும் செயல்படுத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிகள் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் அதே வேளையில் அஜ்மான் முன்னேற்றத்திற்கு உதவுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel