ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கார்டு அமைப்பு (UAESWITCH) மற்றும் உள்ளூர் கார்டு பிராண்டான ஜெய்வான் ஆகியவற்றை இயக்கும் அல் எதிஹாட் பேமண்ட்ஸ், விசா உடன் இணைந்து “ஜெய்வான் – விசா (Jaywan – Visa)” எனப்படும் இணை-பேட்ஜ் செய்யப்பட்ட பிராண்டட் டெபிட் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய கார்டுகளில் ஜெய்வான் மற்றும் விசா ஆகிய இரண்டு லோகோக்களும் இருக்கும். எனவே இதைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் நாட்டில் உள்ள உள்ளூர் கடைகளிலும் ஆன்லைனிலும் ஷாப்பிங் செய்யும் போது பணம் செலுத்த முடியும்.
மேலும், இது பயணம் மற்றும் சர்வதேச ஆன்லைன் ஷாப்பிங்கிற்கும் ஏற்றதாக இருக்கும். இதன் மூலம் அமீரக குடியிருப்பாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள 150 மில்லியனுக்கும் அதிகமான வணிக கூட்டாளர்களிடம் இந்த கார்டை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என்று கூறப்படுகின்றது.
இரண்டு வகையான அட்டைகள்:
1. ஜெய்வான் கார்டு:
– ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளில் உள்ளூர் பயன்பாட்டிற்கு இந்த கார்டை பயன்படுத்தலாம்.
2. இணை-பேட்ஜ் செய்யப்பட்ட ஜெய்வான் கார்டு (ஜெய்வான்-விசா கார்டு):
– டிஸ்கவர், மாஸ்டர்கார்டு, விசா மற்றும் யூனியன் பே போன்ற சர்வதேச கட்டணத் திட்டங்களுடன் இணைந்து வழங்கப்படும் இணை-பேட்ஜ் ஜெய்வான் கார்டு வெளிநாடுகளில் பணம் செலுத்துவதற்கு வழங்கப்படும்.
இது எவ்வாறு செயல்படுகிறது:
- ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் UAESWITCH (உள்ளூர் அமைப்பு) மூலம் கையாளப்படும்.
- GCC பகுதிக்கு வெளியே எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் விசாவின் உலகளாவிய வலையமைப்பான ‘VisaNet’ மூலம் செயல்படுத்தப்படும்.
இது குறித்து அல் எதிஹாட் பேமெண்ட்ஸின் தலைவர் சைஃப் ஹுமைத் அல் தஹேரி பேசுகையில், “இந்தப் புதிய அட்டைகள் பணம் செலுத்துதல்களை எளிதாக்கும், அத்துடன் அது பாதுகாப்பானவை மற்றும் திறமையானவை. ஜெய்வான் அமீரகத்தின் நிதி அமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான படியாகும்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய விசாவில் GCCயின் மூத்த துணைத் தலைவரும் குழு நாட்டு மேலாளருமான டாக்டர் சயீதா ஜாஃபர், “அமீரகத்தில் உள்ள நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு அதிக டிஜிட்டல் கட்டண விருப்பங்களைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது பணத்தை நம்பியிருப்பதைக் குறைக்க உதவுகிறது” என்று விவரித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel