ஷார்ஜாவின் அல் கஃபேயா பகுதியில் உள்ள ‘Al Qaiem Public Kitchen’ ரமலான் மாதத்தில் பிரபலமான இடமாக மாறியுள்ளது, ஆடம்பர கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கால்நடையாக வரும் வாடிக்கையாளர்களை பெருமளவில் ஈர்க்கிறது. புகழ்பெற்ற சமையலறையின் பிரபலமான எமிராட்டி உணவான ஹரீஸ் மற்றும் பிரியாணியை வாங்க ஆர்வமாக மக்கள் மதியம் 1 மணி முதல் கூட்டம் கூடுகின்றனர்.
இந்த சமையலறையில் தினமும் 4,500 கிலோ ஹரீஸ் மற்றும் பிரியாணி உணவு தயாரிக்கப்படுகிறது, சிக்கன் மற்றும் மட்டன் ஹரீஸ் இரண்டு வகையும் விநியோகிக்கப்படுகிறது. இதனால் ரமலான் மாதத்தில் மதியம் 1:30 மணிக்கு, கடை திறக்கும்போது, வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுவதால் நான்கு மணி நேரத்திற்குள், உணவு விற்றுத் தீர்ந்துவிடுகிகதாம்.
குறிப்பாக, மட்டன் பிரியாணி பெரும்பாலும் பிற்பகல் 2:30 மணிக்குள் தீர்ந்துவிடும், பல வாடிக்கையாளர்கள் மொத்தமாக வாங்குவதாகவும் கூறிய இந்த கடை உரிமையாளர், சமயலறையில் சிக்கன் பிரியாணியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு உணவுப் பிரியர்கள் அணி திரண்டு கடைக்கு வருவதால், அதிக தேவை காரணமாக, கூட்டத்தை நிர்வகிக்க அருகில் ஒரு போலீஸ்காரரும் நிறுத்தப்பட்டுள்ளார்.
எக்கச்சக்கமான வாடிக்கையாளர் கூட்டம் இருந்தபோதிலும், சமையலறை 10 பேர் கொண்ட குழுவுடன் சமைப்பதில் இருந்து பரிமாறுவது வரை அனைத்தையும் கையாளுவதாகக் கூறும் உரிமையாளர், 50 கிலோ திறன் கொண்ட எட்டு பெரிய பாத்திரங்களில் ஹரீஸ் நான்கு கூடுதல் பாத்திரங்களில் பிரியாணி தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், வாடிக்கையாளர்கள் வெளியேறிய பிறகு, மீதமுள்ள உணவுகள் பேக் செய்யப்பட்டு உணவகத்திற்கு அருகிலுள்ள மசூதிகளுக்கு நோன்பு திறப்பவர்களுக்காக வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மலிவு விலையில் உணவு
உயர்தரமான பொருட்கள் இருந்தபோதிலும், அல் கைமில் உணவுகள் மலிவு விலையில் உள்ளன, விலை 10 திர்ஹம் மட்டுமே. பணக்கார குடும்பங்கள், நீல காலர் தொழிலாளர்கள் அல்லது டெலிவரி ரைடர்கள் என எவரும் அனுபவிக்கக்கூடிய ஒரு நிறைவான உணவை வழங்குவதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.
அல் கைம் பொது சமையலறை அதன் கடுமையான சுகாதாரத் தரநிலைகளுக்கு பெயர் பெற்றது, ஆம், சமீபத்தில் ஷார்ஜா நகராட்சியின் திடீர் ஆய்வுக்குப் பிறகு 100% சுத்தமான மற்றும் சுகாதார மதிப்பீட்டைப் பெற்றது. எப்போதும் தூய்மைக்கு முன்னுரிமை அளித்ததற்காக அமான் தனது தந்தையைப் பாராட்டுகிறார், இது இன்றும் பின்பற்றப்படுகிறது என்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel