இஸ்லாமியர்களின் பண்டிகைத் திருநாளான ஈத் அல் ஃபித்ர் நெருங்கி வரும் நிலையில், அமீரகக் குடியிருப்பாளர்கள் பண்டிகைக்கால சலுகைகளில் பெருட்களை வாங்கிக் குவிக்க ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்நிலையில், துபாய் ஃபெஸ்டிவல்ஸ் அண்ட் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட் (Dubai Festivals and Retail Establishment-DFRE) ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தி கிரேட் ஆன்லைன் சேல்ஸ் அதன் மூன்றாவது பதிப்பிற்கு மீண்டும் வந்துள்ளது.
இந்த அற்புதமான விற்பனை நிகழ்வில் நூற்றுக்கணக்கான சிறந்த பிராண்டுகள் பங்கேற்கும் என்றும், பல தயாரிப்புகளுக்கு 95% வரை மிகப்பெரிய தள்ளுபடியைப் பெறலாம் என்றும் DFRE தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. DFREயின் படி, இந்த டிஜிட்டல் விற்பனையில், ஒரு புதிய மெய்நிகர் மால் (interactive virtual mall) தொடங்கப்படும். அதில் பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் பிரத்யேக தள்ளுபடி கூப்பன்களை அனுபவிக்க முடியும்.
தேதி- மார்ச் 27 முதல் மார்ச் 30 வரை
பங்கேற்பது எப்படி?
இந்த மாபெரும் விற்பனையில் பங்கேற்க விரும்புவர்கள், முதலில் ‘Great Online Sale’ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்த பிறகு, பயனர்கள் டிஜிட்டல் முறையில் உள்ளூர் மற்றும் சர்வதேச பிராண்டுகளின் தயாரிப்பு பொருட்களை ஆராயலாம் மற்றும் ஷாப்பிங் செய்யலாம். மேலும், பிரத்யேக தள்ளுபடி கூப்பன்கள் மூலம் அற்புதமான பரிசுகளைப் பெறலாம்.
கூடுதலாக, 100,000 திர்ஹம் வரை வெல்லும் வாய்ப்பு மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வகை விர்ச்சுவல் கடைகளில் வாங்குபவர்கள் 50,000 திர்ஹம்ஸ் வரை மதிப்புள்ள போனஸ் ரொக்கப் பரிசுகளையும் வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
பல்வேறு வகைகளில் தள்ளுபடிகள்:
- ஃபேஷன், காலணிகள், ஆபரணங்கள், நகைகள், கைக்கடிகாரங்கள்
- ஹெல்த் மற்றும் அழகு சாதனப் பொருட்கள்
- குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள்
- எலெக்ட்ரானிக்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அலங்காரங்கள்
பங்கேற்கும் பிராண்டுகள்:
2XL, 6th Street, அமேசான், பேபிஷாப், பெவர்லி ஹில்ஸ் போலோ கிளப் (Beverly Hills Polo Club), க்ரேட் & பேரல் (Crate & Barrel), டமாஸ் (Damas), டூன் லண்டன் (Dune london), எசிட்டி (Ecity), எமாக்ஸ் (Emax), ஹோம் சென்டர், ஜவாரா ஜூவல்லரி (Jawhara jewellery), லெகோ (Lego), ஜம்போ (Jumbo), நம்ஷி (Namshi), நூன் (Noon), பூமா (Puma), ரீப்ளே (Replay), ஸ்டீவ் மேடன் (Steve Madden) மற்றும் பல.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel