ADVERTISEMENT

அமீரகத்தில் தொழிலாளர்களுக்கான ஈத் கொண்டாட்டங்கள்: கார், விமான டிக்கெட் உள்ளிட்ட பரிசுகளை வெல்லும் வாய்ப்பு..!!

Published: 30 Mar 2025, 10:27 AM |
Updated: 30 Mar 2025, 10:27 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) நாடு முழுவதும் 10 இடங்களில் தொழிலாளர்களுக்கான ஈத் அல் பித்ர் கொண்டாட்டங்களை நடத்தவுள்ளது. இந்த நிகழ்வுகள் ஈத்தின் முதல் மற்றும் இரண்டாவது நாட்களில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை உற்சாகமான செயல்பாடுகளுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

‘Our Workers, the Pulse of Our Business’ என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் இந்த கொண்டாட்டங்கள், நாட்டின் வளர்ச்சியில் தொழிலாளர்கள் வகிக்கும் முக்கிய பங்கைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த நிகழ்வுகள் துபாய் (3 இடங்கள்), அபுதாபி (2 இடங்கள்), ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா ஆகிய இடங்களில் நடைபெறும்.

அதே வேளையில், பணியாளர்களிடையே மகிழ்ச்சி, வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கொண்டாட்டங்களில் விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் அனைத்து வயதினருக்கும் வேடிக்கையான செயல்பாடுகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், மொபைல் போன்கள், விமான டிக்கெட்டுகள் மற்றும் ஒரு புத்தம் புதிய கார் போன்ற அற்புதமான பரிசுகளை அள்ளித்தரும் ராஃபிள் டிராக்களிலும் தொழிலாளர்கள் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடியைக் காட்டி இந்த ரேஃபிளில் பங்கேற்கலாம், மேலும் இதற்கு ‘UAE workers events’ இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.

நேரம்:

  • விளையாட்டு & பொழுதுபோக்கு:  மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை 
  • மேடை நிகழ்ச்சிகள் & நாட்டுப்புற நடனங்கள்: மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT