துபாயில் உள்ள நுகர்வோர்களாகிய பொதுமக்கள் விரைவில் சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிரான புகார்களை நேரடியாக வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்க முடியும், இதனால் செயல்முறை விரைவாகவும் வசதியாகவும் இருக்கும். துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் (DET) ஒரு பகுதியான துபாய் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நியாயமான வர்த்தகக் கழகத்தால் (DCCPFT) தொடங்கப்பட்ட இந்தப் புதிய முயற்சி அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
DCCPFT இன் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இயக்குனர் அஹ்மத் அலி மூசா, புகார் செயல்முறையை எளிதாக்க இந்த தளம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் என்று கூறியுள்ளார். இது நுகர்வோர் ஆவணங்களைப் பதிவேற்றவும், தங்கள் புகார்கள் குறித்த சில கேள்விகளுக்கு பதிலளிக்கவும், DET இலிருந்து அதிகாரப்பூர்வ தீர்வு கடிதத்தை விரைவாகப் பெறவும் அனுமதிக்கும். பின்னர் நுகர்வோர் இந்தக் கடிதத்தை சில்லறை விற்பனையாளரிடம் சமர்ப்பிக்கலாம், அவர் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், ஒரு சில்லறை விற்பனையாளர் அல்லது நிறுவனம் தீர்மானத்தை ஏற்க மறுத்தால், அவர்கள் அபராதத்தை எதிர்கொள்வார்கள் என்பதையும் அதிகாரி விவரித்துள்ளார். அதேபோல், புகார்கள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, நுகர்வோர் இன்வாய்ஸ்கள், விலைப்பட்டியல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்ற தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும். சரியான ஆவணங்கள் இல்லாமல், புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதையும் அந்த அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்.
அதிகாரியின் கூற்றுப்படி, இந்த புதிய சேவை சோதனை கட்டத்தில் உள்ளது மற்றும் நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. எனினும் தற்போது DET ஐ தொடர்புகொள்ள தேவையுள்ளவர்கள் 600545555 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலும், துல்லியமான தகவலுக்கு, நுகர்வோர் அதிகாரப்பூர்வ DET வலைத்தளத்தைப் பார்வையிடவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தற்போது, துபாயில் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலைத்தளம் அல்லது அழைப்பு மையம் மூலம் குடியிருப்பாளர்கள் புகார்களைச் சமர்ப்பிக்கலாம் என்றாலும், அழைப்பு மையத்தின் இந்த எண்ணில் கிடைக்கும் புதிய வாட்ஸ்அப் சேவை, நுகர்வோர் தொடர்பு கொள்ள மிகவும் அணுகக்கூடிய வழியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel