ADVERTISEMENT

துபாயில் ஈத் விடுமுறைக்கு பீச் போறீங்களா..?? இந்த பப்ளிக் பீச் எல்லாம் ஃபேமிலிக்கு மட்டும்தான்…

Published: 28 Mar 2025, 9:08 PM |
Updated: 28 Mar 2025, 9:22 PM |
Posted By: Menaka

அமீரகக் குடியிருப்பாளர்கள் ஈத் விடுமுறையின் போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வெளிப்புற ஈர்ப்புகளைத் தேடி வரும் நிலையில், துபாய் முனிசிபாலிட்டி அதன் நான்கு பொது கடற்கரைகள் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் போது குடும்பங்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. விடுமுறை காலத்தில் கடற்கரைக்கு செல்பவர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு முனிசிபாலிட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இவ்வாறு குடும்பங்களுக்கு சில பொது கடற்கரைகளை நியமிப்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்த உதவுவதுடன் பண்டிகைக் காலத்தில் குடும்பங்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதியளிக்கும் என கூறப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்ட கடற்கரைகள்:

  • ஜுமேரா 2
  • ஜுமேரா 3
  • உம் சுகீம் 1
  • உம் சுகீம் 2

மேலும், கடற்கரைகளில் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கூட்டக் கட்டுப்பாட்டுக்காக 126 பணியாளர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த குழுவையும் முனிசிபாலிட்டி நியமித்துள்ளது. கடற்கரைக்குச் செல்வோருக்கு மிக உயர்ந்த தரமான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் வளங்களால் அவர்களுக்கு ஆதரவளிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, 10 பயிற்சி பெற்ற நிபுணர்களைக் கொண்ட ஒரு மேற்பார்வை குழு கடற்கரைகள் முழுவதும் போக்குவரத்து, பார்க்கிங் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பை நிர்வகிக்கும் என்பதையும் துபாய் முனிசிபாலிட்டி வெளிப்படுத்தியுள்ளது. கூடுதலாக, மாற்றுத்திறனாளி மக்கள் மற்றும் முதியவர்களுக்கான பிரத்யேக பாதைகளுடன் அணுகல் நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளது, இதனால் அனைவரும் விடுமுறையினை சிறந்த முறையில் அனுபவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

அதிக பொழுதுபோக்கை விரும்புவோருக்கு, துபாய் ஃபிரேம் மற்றும் சில்ட்ரன்ஸ் சிட்டி போன்ற முக்கிய பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் விடுமுறை நாட்களில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்தும் என்பதையும் துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel