ADVERTISEMENT

துபாய்: 2 பில்லியன் திர்ஹம்ஸ் செலவில் உலகின் மிக உயரமான ரிசார்ட் திட்டம் ‘Therme Dubai’ !! முக்கிய அம்சங்கள் என்ன…??

Published: 16 Mar 2025, 6:37 PM |
Updated: 16 Mar 2025, 6:37 PM |
Posted By: Menaka

துபாய் வாழ்க்கைத் தர உத்தி 2033 இன் ஒரு பகுதியாக, உலகின் மிக உயரமான நலவாழ்வு ஓய்வு விடுதியான தெர்ம் துபாய் (Therme Dubai) வரவிருக்கும் 2028 இல் திறக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. சுமார் 2 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பீட்டில் வரவிருக்கும் இந்த திட்டம் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த ரிசார்ட் ராயல் பேலஸ்க்கு அருகில் உள்ள ஜபீல் பூங்காவில் 100 மீட்டர் உயரத்திலும் சுமார் 500,000 சதுர அடி பரப்பளவில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 1.7 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்டிடம் அதன் வெப்பக் குளங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் 90 சதவீதத்தை மறுசுழற்சி செய்யும் என்றும் புதிய காற்று மற்றும் குளிரூட்டும் தேவைகளில் தோராயமாக 80 சதவீதம் சுத்தமான எரிசக்தி மூலங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ரிசார்ட்டில் வரவிருக்கும் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்:

ADVERTISEMENT

முக்கிய அம்சங்கள்:

  • தாவரவியல் பூங்கா (botanical garden): ரிசார்ட்டில் தொங்கும் தாவரவியல் பூங்கா இடம்பெறும் என்றும், இது 200 க்கும் மேற்பட்ட தாவர இனங்களைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது உலகளவில் மிகப்பெரிய உட்புற தாவரவியல் தோட்டத்தை கொண்டிருக்கும்.
  • வெப்ப குளங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் (thermal pools & falls): விருந்தினர்கள் அங்குள்ள வெப்பக் குளங்கள் (thermal pool) மற்றும் மூன்று 18 மீட்டர் நீர்வீழ்ச்சிகளை அனுபவிக்க முடியும்.
  • மிச்செலின்-ஸ்டார் உணவகம்: ரிசார்ட்டின் ஒரு பகுதியாக மிச்செலின் ஸ்டார் ரெஸ்டாரன்ட் இருக்கும், இது உயர்தர உணவு அனுபவங்களை வழங்கும்.
  • விளையாட்டு பகுதி: குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறந்த அனுபவங்களை வழங்க 15 நீர் ஸ்லைடுகளைக் கொண்ட உற்சாகமூட்டும் ஒரு விளையாட்டு பகுதி இடம்பெறும்.
  • நிலைத்தன்மை: இந்த திட்டம் நிலைத்தன்மையை வலியுறுத்துகிறது, அதன் வெப்பக் குளங்களில் பயன்படுத்தப்படும் 90% நீரை மறுசுழற்சி செய்கிறது மற்றும் அதன் புதிய காற்று மற்றும் குளிரூட்டும் தேவைகளில் 80% தூய்மையான எரிசக்தி ஆதாரங்கள் மூலம் எடுத்துக் கொள்கிறது.

இது குறித்து தெர்மே குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராபர்ட் ஹானியா கூறுகையில், “நகரங்கள் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு ஒருங்கிணைக்க முடியும் என்பதை நாங்கள் வடிவமைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற கட்டடக்கலை நிறுவனமான தில்லர் ஸ்கோஃபிடியோ ரென்ஃப்ரோவால் வடிவமைக்கப்பட்டுள்ள தெர்மே துபாய் அதன் பார்வையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இயற்கையையும், நீர் மற்றும் கலாச்சாரத்தையும் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT