ADVERTISEMENT

துபாய் ஷேக் சையத் சாலையில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்திய RTA!! இனி வாகன திறன் அதிகரிக்கும் என தகவல்..!!

Published: 20 Mar 2025, 12:59 PM |
Updated: 20 Mar 2025, 12:59 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), வாகன நெரிசலைக் குறைப்பதற்கும் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் ஷேக் சையத் சாலையில் மேம்பாடுகளை நிறைவு செய்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. துபாயில் உயர் சாலைப் பாதுகாப்புத் தரங்களைப் பேணும் அதேவேளையில் மென்மையான பயணத்தை உறுதி செய்வதே இந்த மேம்பாடுகளின் முக்கிய குறிக்கோள் எனவும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் பிரதான சாலைகளில் ஒன்றான ஷேக் சையத் சாலையானது, துபாய் இன்டர்நேஷனல் ஃபினான்ஷியல் சென்டர், புர்ஜ் கலீஃபா, துபாய் மால் என குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய பொருளாதார மற்றும் வணிக அடையாளங்களால் சூழப்பட்ட ஒரு முக்கிய பொருளாதார வழித்தடமாகும். மேலும், இது தினசரி பயணம் மற்றும் வணிக போக்குவரத்தில் அமீரகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

RTA வின் போக்குவரத்து இயக்குநர் அகமது அல் க்ஸைமி, புதுமையான மேம்பாடுகள் மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகள் மூலம் எமிரேட்டில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதில், குறிப்பாக ஷேக் சையத் சாலையில் வாகன ஓட்டத்தை மேம்படுத்த சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அதிக கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

முக்கிய மேம்பாடுகள்:

>> அபுதாபிக்குச் செல்லும் சர்வீஸ் சாலை: ஃபினான்ஷியல் சென்டர் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள அபுதாபி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலை மூன்று பாதைகளிலிருந்து நான்கு பாதைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது சாலை திறனை 25% அதிகரித்து, ஒரு மணி நேரத்திற்கு 2,400 வாகனங்களுக்குப் பதிலாக 3,200 வாகனங்களை அனுமதிக்கிறது. இது நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை ஐந்து நிமிடங்களிலிருந்து இரண்டாகக் குறைத்துள்ளது என்பதை அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார்.

>> நீண்ட இணைப்புப் பாதை: அல் கைல் சாலைக்கும் துபாய் சிட்டி நோக்கி செல்லும் ஃபினான்ஷியல் சென்டர் தெருவிற்கும் இடையிலான இணைப்பு தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நெரிசலைக் குறைத்து, ஷேக் சையத் சாலையில் பயண நேரத்தை நான்கு நிமிடங்களிலிருந்து மூன்றாகக் குறைத்துள்ளது.

ADVERTISEMENT

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான RTA ஆல் மேற்கொள்ளப்பட்ட இந்த சாலை மேம்படுத்தல்கள், ஷேக் சையத் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தினசரி பயணத்தை வேகமாகவும் திறமையாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel