ADVERTISEMENT

துபாய்: ரமலான் முழுவதும் மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்கும் RTA…

Published: 8 Mar 2025, 5:36 PM |
Updated: 8 Mar 2025, 5:36 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ரமலான் மாதத்தின் போது  மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ நிலையங்களில் ரமலான் 24 ஆம் தேதி வரை இலவச இஃப்தார் உணவு விநியோகிக்கப்படும் என்றும், ‘noon Food’ நிறுவனத்துடனான கூட்டாண்மை மூலம்  இந்த முயற்சி சாத்தியமானது என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மெட்ரோ பயணிகள் மற்றும் பஸ் டிரைவர்கள், டெலிவரி ரைடர்ஸ் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட தேவைப்படுபவர்களுக்கு இலவச உணவை வழங்குவதன் மூலம் ரமலான் மாதத்தில் ஆசீர்வாதங்களையும் ஒற்றுமையையும் பரப்புவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, மெட்ரோ நிலையங்கள், அவற்றின் தலைமையகம் மற்றும் கடல் போக்குவரத்து மையங்கள் போன்ற முக்கிய இடங்களில் 20 சமூக நிகழ்வுகள் மற்றும் தொண்டு நடவடிக்கைகளையும் RTA நடத்துவதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இதே போல பல தொண்டு நிறுவனங்களும் உணவகங்களும் ரமலான் மாதத்தில் இலவச இஃப்தார் உணவுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT