ADVERTISEMENT

அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் தொழுகைக்கான நேரங்கள் வெளியீடு..

Published: 29 Mar 2025, 10:44 AM |
Updated: 29 Mar 2025, 7:04 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதம் நிறைவடையும் நிலையில், ஈத் அல் ஃபித்ரின் மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்கு குடியிருப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். அமீரகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்களுக்கு ஈத் அல் ஃபித்ரின் சிறப்பு தொழுகையானது மசூதிகள் மற்றும் சிறப்பாக நியமிக்கப்பட்ட வெளிப்புற பிரார்த்தனை மைதானங்களில் ஈத் தொழுகைகள் நடத்தப்படும்.

ADVERTISEMENT

எனவே, ஈத் பண்டிகைக்கு முன்னதாக,  அதிகாரிகள் தொழுவதற்காக ஏராளமான உட்புற மற்றும் வெளிப்புற இடங்களை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் போக்குவரத்தை நிர்வகிப்பதற்கும் முக்கிய மசூதிகள் மற்றும் சிறப்பு தொழுகை நடத்தப்படும் மைதானங்களில் சீரான நுழைவு மற்றும் வெளியேறுதலை உறுதி செய்வதற்கும் கூடுதல் நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

தயார் நிலையில் இருக்கும் 680 க்கும் மேற்பட்ட தொழுகைப் பகுதிகள்

இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (IACAD) துபாய் முழுவதும் 680 க்கும் மேற்பட்ட மசூதிகள் மற்றும் தொழுகை அரங்குகள் உடன் ஈத் தொழுகைக்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதில் முக்கிய இடங்களில் 14 பெரிய தொழுகை பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் 668 சிறிய மசூதிகள் உள்ளன.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, கூட்டத்தின் நடமாட்டத்தை நிர்வகிக்கவும், அனைத்து வழிபாட்டாளர்களுக்கும் சீரான நுழைவு மற்றும் வெளியேறலை உறுதி செய்யவும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு கூடுதல் ஆதரவுடன் ஒரு சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது எளிதான அணுகலை உறுதி செய்யும் மற்றும் தொழுகையின் போது கூட்ட நெரிசலைத் தவிர்க்க உதவும் என்று கூறப்படுகின்றது.

ஈத் தொழுகை எப்போது?

இன்று (மார்ச் 29, சனிக்கிழமை) மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு, ஷவ்வால் பிறையை உறுதிப்படுத்த அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு கூடவுள்ளது. இது ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை வருமா அல்லது மார்ச் 31, 2025 திங்கட்கிழமை வருமா என்பதை தீர்மானிக்கும்.

ADVERTISEMENT

எனவே, இன்று மாலை ஈத் அல் ஃபித்ருக்கான அதிகாரப்பூர்வ சிறப்பு தொழுகைக்கான நேரங்கள் பிறை பார்க்கும் குழுவால் உறுதி செய்யப்படும். அதிகாரப்பூர்வ நேரங்கள் சனிக்கிழமை மாலை பகிரப்படும் என்றாலும், துபாயைச் சேர்ந்த அறிஞர் ஷேக் அயாஸ் ஹவுஸியின் மதிப்பீட்டின் அடிப்படையில், சிறப்பு தொழுகை நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ஈத் தொழுகை நேரங்கள்

நாடு முழுவதும் உள்ள மசூதிகளிலும் திறந்தவெளி மைதானங்களிலும் நடத்தப்படும் ஈத் தொழுகைக்கான நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ நேரங்கள் 

  • அபுதாபி: காலை 6:32
  • துபாய்: காலை 6:30
  • ஷார்ஜா: காலை 6:28
  • அஜ்மான்: காலை 6:28
  • உம் அல் குவைன்: காலை 6:27
  • ராஸ் அல் கைமா: காலை 6:25
  • ஃபுஜைரா: காலை 6:25

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel