ADVERTISEMENT

ஈத் 2025: மிகவும் பிஸியாகும் துபாய் ஏர்போர்ட்.. பயணிகளுக்கு எமிரேட்ஸ் வழங்கிய அறிவுறை.!!

Published: 20 Mar 2025, 5:51 PM |
Updated: 20 Mar 2025, 5:54 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் பித்ர் விடுமுறைக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈத் விடுமுறைக்கு முன்னதாகவும், அதன் பின்னரும், துபாய் வழியாக ஏராளமான பயணிகள் பயணிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக அமீரக விமான நிலையங்களில் பரபரப்பான வார இறுதி நாட்களை எதிர்பார்ப்பதாக அமீரகத்தின் முதன்மையான விமான நிறுவனமான எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, எமிரேட்ஸ் விமானத்தின் டெர்மினல் 3 விமான நிலைய நுழைவாயில்களைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று விமான நிறுவனம் அமீரக பயணிகளை எச்சரித்துள்ளது. எனவே தாமதங்களைத் தவிர்க்க பயணிகள் தங்கள் பயணங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

எமிரேட்ஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, மார்ச் 28, 29 மற்றும் ஏப்ரல் 5, 6 ஆகிய தேதிகள் மிகவும் பரபரப்பான பயண நாட்களாக இருக்கும் என்றும், ஈத் விடுமுறைக்காக 80,000 க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையம் வழியாக புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஆகையால், இந்த காலகட்டத்தில் பயணிகள் தங்கள் விமானத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வந்து சேரவும், தங்கள் விமானப் பயண நேரத்தைச் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பயணத்திற்கு முந்தைய இரவில் இலவச லக்கேஜ்களை இறக்கிவிடுதல் சேவைகளையும் மற்றும் புறப்படுவதற்கு முன்கூட்டியே செக்-இன் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு எமிரேட்ஸ் கூறியுள்ளது.

அத்துடன், பயணிகள் எமிரேட்ஸ் வலைத்தளம், ஆப்ஸ், சிட்டி செக்-இன், கியோஸ்க்குகள், மொபைல் போர்ட்கள் அல்லது ஹோம் செக்-இன் மூலம் செக்-இன் செய்யலாம். புறப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு போர்டிங் வாயில்கள் மூடப்படும், மேலும் விமானங்கள் கால அட்டவணையில் புறப்படுவதை உறுதிசெய்ய செக்-இன் மற்றும் கேட் மூடல் நேரங்கள் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு சோதனையை முடிக்க வேண்டும், மேலும் பிரீமியம் எகானமி அல்லது எகானமி வகுப்பில் முன்பதிவு செய்திருந்தால், அவர்கள் விமானம் புறப்படுவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பும், முதல் அல்லது வணிக வகுப்பில் முன்பதிவு செய்திருந்தால், புறப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பும் வாயிலை அடைய வேண்டும் என்று எமிரேட்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel