ADVERTISEMENT

துபாய்: ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு பயணிகளுக்கு 500 திர்ஹம்ஸ் கிஃப்ட் வவுச்சரை வழங்கும் RTA..!!

Published: 31 Mar 2025, 7:57 PM |
Updated: 31 Mar 2025, 7:57 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள குடியிருப்பாளர்கள் நேற்று ஈகைத் திருநாள் எனப்படும் ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோன்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமும் (RTA), இந்த ஈத் பெருநாளில் நோல் பிளஸ் உறுப்பினர்களுக்கு இலவச வவுச்சர்கள் உள்ளிட்ட பிரத்யேக வெகுமதிகளை வழங்கி தனது ஈத் அல் ஃபித்ர் கொண்டாடத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், பண்டிகை நாளில் மகிழ்ச்சியை அதிகரிக்கவும் நடத்தப்படும் இந்த சிறப்பு பிரச்சாரம் ஏப்ரல் 4 வரை நடைபெறும் என்று RTA அதன் சமூக ஊடக தளங்களில் தெரிவித்துள்ளது. எனவே, துபாய் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் ஷாப்பிங், உணவு மற்றும் பலவற்றிற்கான இலவச வவுச்சர்கள் உட்பட பல அருமையான பரிசுகளை வெல்லலாம்.

அதாவது மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரை நடத்தப்படும் இந்த சிறப்பு பிரச்சாரத்தில் RTAவின் நோல் பிளஸ் உறுப்பினர்களுக்கு பிரத்யேகமா சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். அதில் குறிப்பாக அமீரகத்தின் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் 500 திர்ஹம்ஸிற்கு ஷாப்பிங் செய்ய அனுமதிக்கும் கிஃப்ட் வவுச்சர்கள் மற்றும் பிற அற்புதமான பரசுகளும் வழங்கப்படும் என RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இது குறித்த விவரங்களுக்கு, RTAவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு ஈத் அல் ஃபித்ர் பண்டிகை பரிசை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் RTA அதிகாரிகள் கூறியுள்ளனர். துபாயில் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை முன்னிட்டு துபாய் மெட்ரோ, டிராம், பேருந்து சேவை, கடல் போக்குவரத்து சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளில் மாற்றங்களை செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT