ADVERTISEMENT

இந்திய பாஸ்போர்ட்டுகளில் நான்கு முக்கிய மாற்றங்களை அறிவித்த இந்தியா..!! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்…

Published: 12 Mar 2025, 12:46 PM |
Updated: 12 Mar 2025, 12:46 PM |
Posted By: Menaka

இந்திய அரசாங்கம் இந்திய பாஸ்போர்ட்டிலும் அது வழங்கப்படும் முறையிலும் சமீபத்தில் முக்கியமான நான்கு மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்தப் புதுப்பிப்புகள் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த மாற்றங்கள் அனைத்து இந்தியர்களையும் பாதிக்காவிட்டாலும், அவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான மாற்றங்கள் என்ன என்பதனை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

புதிய வண்ணக் குறியீடு கொண்ட பாஸ்போர்ட்கள்

இந்திய பாஸ்போர்ட்டுகள் இப்போது அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து வெவ்வேறு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. அதன்படி அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிற பாஸ்போர்ட், வெளிநாட்டு தூதர்களுக்கு சிவப்பு நிற பாஸ்போர்ட், மற்றும் சாதாரண குடிமக்களுக்கு அதே நீலம் நிறத்திலான பாஸ்போர்ட் என புதிய வண்ண அமைப்பில் வழங்கப்படும்.

ADVERTISEMENT

பிறப்புச் சான்றிதழ் தேவை

அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பிறப்புச் சான்றிதழ் மட்டுமே செல்லுபடியாகும் பிறப்புச் சான்றாக இருக்கும். பிறப்புச் சான்றிதழ் நகராட்சி நிறுவனம் அல்லது பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 1969 இன் கீழ் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் அவை வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்டில் குடியிருப்பு முகவரி இல்லை

பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கும் நோக்கில், குடியிருப்பு முகவரி இனி பாஸ்போர்ட்டில் அச்சிடப்படாது. அதற்கு பதிலாக, முகவரி ஒரு பார்கோடில் பதிக்கப்படும். தேவைப்பட்டால் குடிவரவு அதிகாரிகள் இந்த பார்கோடை ஸ்கேன் செய்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் முகவரியை சரிபார்க்கலாம்.

ADVERTISEMENT

பெற்றோரின் பெயர்கள் இனி தேவையில்லை

இந்திய பாஸ்போர்ட்டுகளுக்கு இனி விண்ணப்பதாரரின் பெற்றோரின் பெயர்கள் தேவையில்லை. இந்த மாற்றம் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதையும் குடும்ப விவரங்கள் தொடர்பான சாத்தியமான சிக்கல்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு அறிவித்துள்ள இந்த மாற்றங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு மிக முக்கியமானவை என்பது மட்டுமல்லாமல் இது பாஸ்போர்ட் வழங்கும் செயல்முறையை மிகவும் பாதுகாப்பானதாகவும் தனிப்பட்டதாகவும் மாற்றுவதற்கான முயற்சிகளை பிரதிபலிக்கின்றன எனவும் இந்திய அரசு அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel