ADVERTISEMENT

எமிரேட்ஸ் ஐடியில் உங்கள் தனிப்பட்ட விபரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?? விபரங்கள் இங்கே…

Published: 11 Mar 2025, 8:19 AM |
Updated: 11 Mar 2025, 8:19 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களும் குடிமக்களும் எமிரேட்ஸ் ஐடியை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டியது கட்டாயமாகும். எனவே அமீரகத்தின் குடிமக்கள் அல்லது குடியிருப்பாளர்கள் அவர்களின் எமிரேட்ஸ் ஐடியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது குடியிருப்பு முகவரி போன்ற தனிப்பட்ட தகவலை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டிய தேவை வரலாம்.

ADVERTISEMENT

அவ்வாறு புதுப்பிக்க விரும்புபவர்கள் விரைவாகவும் எளிதாகவும் ஆன்லைனில் புதுப்பிக்க முடியும். ஆம், அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான (ICP) தளத்தின் மூலம் ஆன்லைனில் எளிதாகச் செய்யலாம். இந்தச் சேவை ICP ஸ்மார்ட் சர்வீசஸ் போர்ட்டலில் smartservices.icp.gov.ae இல் கிடைக்கிறது.

மேற்கூறிய படி, உங்கள் தொலைபேசி எண் அல்லது முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்க முடியும் என்றாலும், சில மாற்றங்களுக்கு ICP வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையத்தை நேரில் பார்வையிட வேண்டும். அதாவது, திருமணத்திற்குப் பிறகு உங்கள் குடும்பப் பெயரை மாற்றுதல், உங்கள் தொழிலைப் புதுப்பித்தல் மற்றும் உங்கள் எமிரேட்ஸ் ஐடியில் புகைப்படத்தை மாற்றுதல் ஆகியவற்றிற்கு ஒரு புதிய எமிரேட்ஸ் ஐடி அச்சிடப்பட வேண்டும்.

ADVERTISEMENT

தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் எவ்வாறு புதுப்பிப்பது:

1. ICP ஸ்மார்ட் சர்வீசஸ் போர்ட்டலைப் பார்வையிடவும். அதற்கு http://[smartservices.icp.gov.aeக்குச் செல்லவும். உள்நுழைந்ததும் ‘Public Services’ பகுதியைத் தேர்ந்தெடுத்து, ‘Personal Information – Update Personal Information’ என்பதைத் தேர்ந்தெடுத்து ‘Start Services’ என்பதைக் கிளிக் செய்யவும்.

2. அடுத்தபடியாக, உங்கள் தேசியம், பாஸ்போர்ட் எண், முழுப் பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தகவல்களை வழங்கவும். அதைத் தொடர்ந்து, UAE குடியிருப்பு விசாவில் அச்சிடப்பட்ட கோப்பு எண்ணை உள்ளிடவும், இதில் துறை, ஆண்டு, சேவை மற்றும் வரிசை போன்ற பிரிவுகள் அடங்கும்.

ADVERTISEMENT

3. பின்னர் உங்கள் எமிரேட்ஸ் அடையாள அட்டையின் முன்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள எமிரேட்ஸ் அடையாள எண்ணை உள்ளிடவும். இப்போது, மின்னஞ்சல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மொபைல் எண்ணை வழங்கவும். சரிபார்ப்புக்காக உங்கள் புதிய எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.

4. உங்கள் முகவரி அல்லது மொபைல் எண்ணை புதுப்பிக்க வேண்டும் என்றால் CAPTCHA வை சரிபார்த்து உறுதிப்படுத்தப்பட்டதும், இறுதியில் கட்டணத்தைச் செலுத்தி செயல்முறையை முடிக்கவும்.

செலவு:

உங்கள் எமிரேட்ஸ் ஐடியில் தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான கட்டணம் 150 திர்ஹம்ஸ் ஆகும், இதில் பின்வரும் கட்டணங்களும் அடங்கும்:

  • 100 திர்ஹம்ஸ் சேவை கட்டணம்
  • 22 திர்ஹம்ஸ் ICP கட்டணம்
  • 28 திர்ஹம்ஸ் இ- சேவை கட்டணம்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel