துபாயின் பொது பார்க்கிங் ஆபரேட்டரான பார்கின், ஏப்ரல் மாதத்தில் நகரம் முழுவதும் பார்க்கிங் கட்டணங்கள் கணிசமான மாற்றங்களுக்கு உட்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் புதிய மாறுபட்ட பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் பிரீமியம் பார்க்கிங் இடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, சில பிரீமியம் இடங்கள் போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு 6 திர்ஹம் வரை கட்டணம் வசூலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் எந்த மண்டலத்தில் இருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிவது?
பார்க்கிங் பகுதிகளில் உள்ள அடையாளப் பலகை நீலம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும், இவை பார்க்கிங் மண்டல எண் மற்றும் குறியீட்டைக் காட்டுகின்றன. அதாவது, மூன்று இலக்க எண் மற்றும் ஒரு எழுத்து (232C போன்றவை) என இருக்கும். A, B, C, D என்ற எழுத்துக்கள் நீங்கள் எவ்வளவு பணம் செலுத்துவீர்கள், எவ்வளவு நேரம் வாகனத்தை நிறுத்தலாம் என்பதைக் கூறுகிறது.
எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன?
- மண்டலம் A & C (Zone A & C): இது ஆன்-ஸ்ட்ரீட் பார்க்கிங். பரபரப்பான பகுதிகளில் கட்டணம் அதிகமாக இருக்கும்.
- மண்டலம் B & D (Zone B & D): இவை ஆஃப் ஸ்ட்ரீட் பார்க்கிங், குறைந்த கட்டணங்கள் மற்றும் தினசரி பாஸ்களை வழங்குகின்றன. B மற்றும் D மண்டலங்களில் நீண்ட கால பார்க்கிங் மலிவானதாகும்.
பார்க்கிங் சந்தா செல்லுபடியாகும் காலம்:
சந்தாக்கள் சாலையோர பார்க்கிங் (குறியீடுகள் A மற்றும் C) மற்றும் பிளாட் பார்க்கிங் (குறியீடுகள் B மற்றும் D) ஆகியவற்றிற்கு பொருந்தும். அவை H, J, அல்லது K போன்ற பிற குறியீடுகளைக் கொண்ட பகுதிகளை உள்ளடக்காது. இதில் ஜுமேரா லேக்ஸ் டவர்ஸ் (JLT) மற்றும் துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் போன்ற இடங்களும் அடங்கும்.
துபாயின் புதுப்பிக்கப்பட்ட பொது பார்க்கிங் கட்டணங்கள்
பார்கின் நிர்வகிக்கும் துபாயின் பொது பார்க்கிங் அமைப்பு நான்கு முக்கிய கட்டண மண்டலங்களாக (A, B, C, மற்றும் D) வகைப்படுத்தப்பட்டுள்ளது, இதில் தெருவில் மற்றும் தெருவுக்கு வெளியே பார்க்கிங் இரண்டிற்கும் பிரீமியம் மற்றும் நிலையான விகிதங்கள் பொருந்தும்.
மண்டலம் | பார்க்கிங் வகை | உச்ச நேரங்கள் | நெரிசல் இல்லாத நேரம் |
---|---|---|---|
A | ஆன்-ஸ்ட்ரீட் பார்க்கிங் | நிலையான விலை:
|
நிலையான விலை:
|
பிரீமியம்:
|
பிரீமியம்:
|
||
B | ஆஃப் ஸ்ட்ரீட் பார்க்கிங் | நிலையான விலை:
|
நிலையான விலை:
|
பிரீமியம்:
|
பிரீமியம்:
|
||
C | ஆன்-ஸ்ட்ரீட் பார்க்கிங் | நிலையான விலை:
|
நிலையான விலை:
|
பிரீமியம்:
|
பிரீமியம்:
|
||
D | ஆஃப் ஸ்ட்ரீட் பார்க்கிங் | நிலையான விலை:
|
நிலையான விலை:
|
பிரீமியம்:
|
பிரீமியம்:
|
பிரீமியம் பார்க்கிங் மண்டலங்களை அடையாளம் காணுதல்
2024 ஆம் ஆண்டில், பிரீமியம் பார்க்கிங் இடங்கள் மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று பார்கின் விளக்கியது. அவை:
- பொது போக்குவரத்துக்கு அருகாமையில்: மெட்ரோ நிலையங்களிலிருந்து 500 மீட்டருக்குள் உள்ள பகுதிகள்.
- அதிக பார்க்கிங் தேவை: உச்ச நேர போக்குவரத்து நெரிசலை அனுபவிக்கும் இடங்கள்.
- வணிக மண்டலங்கள்: தேரா, பர் துபாய், டவுன்டவுன் துபாய், பிசினஸ் பே, ஜுமேரா மற்றும் அல் வாஸ்ல் சாலை போன்ற சந்தைகள் மற்றும் வணிக மையங்கள் உள்ள பகுதிகள்
துபாயில் சிறப்பு பார்க்கிங் மண்டலங்கள்
துபாயில் தனித்துவமான கட்டண அமைப்புகளுடன் கூடிய சிறப்பு பார்க்கிங் மண்டலங்கள் உள்ளன. கட்டண விபரங்கள் பின்வருமாறு:
சிறப்பு பார்க்கிங் மண்டலங்கள் | கட்டணம் |
---|---|
டிரேட் சென்டர் பர்ஸ்ட் (Code X) | 0.5 மணி நேரம்: Dh2, 1 மணி நேரம்: Dh4, 2 மணி நேரம்: Dh8, 3 மணி நேரம்: Dh12, 4 மணி நேரம்: Dh16, நிகழ்வு நேரம்: Dh25/மணி நேரம் |
ஜுமேரா லேக்ஸ் டவர்ஸ் (JLT) (Code E) | 1 மணி நேரம்: Dh10, 2 மணி நேரம்: Dh20, 3 மணி நேரம்: Dh30, 4 மணி நேரம்: Dh40 |
தி நாலேஜ் வில்லேஜ் / துபாய் மீடியா சிட்டி / துபாய் இன்டர்நெட் சிட்டி (Code F) | 0.5 மணி நேரம்: Dh2, 1 மணி நேரம்: Dh4, 2 மணி நேரம்: Dh8, 3 மணி நேரம்: Dh12, 4 மணி நேரம்: Dh16, 5 மணி நேரம்: Dh20, 6 மணி நேரம்: Dh24, 7 மணி நேரம்: Dh28, 24 மணி நேரம்: Dh32 |
புர்ஜ் கலிஃபா / மராசி பே / துபாய் ஹெல்த்கேர் சிட்டி / துபாய் ஹில்ஸ் (Code G) | 1 மணி நேரம்: Dh2, 2 மணி நேரம்: Dh5, 3 மணி நேரம்: Dh8, 4 மணி நேரம்: Dh11 |
துபாய் சிலிக்கான் ஓயாசிஸ் (Code H) | 0.5 மணி நேரம்: Dh2, 1 மணி நேரம்: Dh4, 2 மணி நேரம்: Dh8, 3 மணி நேரம்: Dh12, 4 மணி நேரம்: Dh16 |
ஜுமேரா லேக்ஸ் டவர்ஸ் (JLT) (Code I) | 1 மணி நேரம்: Dh10, 2மணி நேரம்: Dh20, 3 மணி நேரம்: Dh30, 4 மணி நேரம்: Dh40 |
ஜுமேரா லேக்ஸ் டவர்ஸ் (JLT) (Code J) | 0.5 மணி நேரம்: Dh2, 1 மணி நேரம்: Dh4, 2 மணி நேரம்: Dh8, 3மணி நேரம்: Dh12, 4 மணி நேரம்: Dh22 |
ஜுமேரா லேக்ஸ் டவர்ஸ் (JLT) (Code K) | 0.5மணி நேரம்: Dh2, 1 மணி நேரம்: Dh4, 2 மணி நேரம்: Dh8, 3 மணி நேரம்: Dh12, 4 மணி நேரம்: Dh16, 5 மணி நேரம்: Dh20, 6 மணி நேரம்: Dh24, 7மணி நேரம்: Dh28, 24 மணி நேரம்: Dh32 |
ஜுமேரா லேக்ஸ் டவர்ஸ் (JLT) (Code L) | 0.5 மணி நேரம்: Dh2, 1 மணி நேரம்: Dh4, 2 மணி நேரம்: Dh8, 3 மணி நேரம்: Dh12, 4 மணி நேரம்: Dh22 |
துபாயில் பொது பார்க்கிங் எப்போது இலவசம்?
எமிரேட்டில் பொது பார்க்கிங் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும், மேலும் இந்த நேரங்களை தவிர்த்து பார்க்கிங் இலவசம். கூடுதலாக, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் பார்க்கிங் இலவசம். இருப்பினும், மல்டி ஸ்டோரீ பார்க்கிங் வசதிகள் 24/7 இயங்கும் மற்றும் எல்லா நேரங்களிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை ஓட்டுனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel