மக்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பல நவீன கட்டண முறைகள் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக உள்ளங்கை மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் கட்டண முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தங்கள் உள்ளங்கையை பயன்படுத்தி பணமில்லா மற்றும் கார்டு இல்லாத பரிவர்த்தனைகளை முடிக்க அனுமதிக்கிறது.
சமீபத்தில் துபாயில் அமைந்துள்ள பவுல்வர்டு எமிரேட்ஸ் டவர்ஸில் (Boulevard Emirates Towers) நடைபெற்ற ‘UAE Innovates 2025 Exhibition’ கண்காட்சியில் உள்ளங்கை மூலம் கட்டணம் மேற்கொள்ளும் முறை காட்சிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடையாளம், குடியுரிமை, சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான (ICP) கூட்டாட்சி ஆணையம் அமீரக வங்கிகளுடன் இணைந்து உள்ளங்கை கட்டண முறையைத் (palm payment system) தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ICP செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட விபரங்களின் படி, இது உள்ளங்கை நரம்பு அடையாள (palm vein identification) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. மேலும் கைரேகை ஸ்கேனிங் போன்ற பிற முறைகளை விட இந்த அமைப்பு அதிக பாதுகாப்பையும் துல்லியத்தையும் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. “your vein, your identity” என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, வெகுவிரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பல்வேறு விற்பனை நிலையங்களிலும் கட்டணத்தின் நிலையான வடிவமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பதிவு செய்வதற்கு, தனிநபர்கள் தங்கள் உள்ளங்கை நரம்புகள் மற்றும் முகத்தை ஸ்கேன் செய்து அடையாளம் காண இரண்டையும் ஒன்றாக இணைக்கப்படும், இதன் மூலம் வங்கிகள் இந்த தகவலை சேகரிக்க முடியும் என கூறப்படுகின்றது. இது குறித்து ICPயின் சேவை மேம்பாட்டு கிளை மேலாளர் சைஃப் அல் ஜாபி பேசுகையில், இந்த முறை கைரேகைகளை விட நம்பகமானது, குறிப்பாக வயதான நபர்களுக்கு, காலப்போக்கில் கைரேகைகள் மாறக்கூடும். எனவே, இந்த புதிய முறையால் பயன்பெறலாம் என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு தனது 10 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் ‘UAE Innovates 2025 Exhibition’ கண்காட்சி சையத் சர்வதேச விமான நிலையத்தில் ICPயின் “ஸ்மார்ட் டிராவல்” அமைப்பு உட்பட பல்வேறு கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel