ரமலான் 2025 இன் போது, துபாய் கோல்ட் சூக் எக்ஸ்டென்ஷனில் மார்ச் 1 முதல் ஏப்ரல் 6 வரை சிறப்பு ஷாப்பிங் பிரச்சாரம் நடைபெற உள்ள நிலையில், அமீரக குடியிருப்பாளர்கள் இந்த பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு வாரமும் 50,000 திர்ஹம்ஸ் வரை மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரச்சாரத்தின் மையப் பகுதியான தங்க பெட்டகம் (golden vault) வியாழக்கிழமை திறக்கப்பட்டது மற்றும் இது ஒவ்வொரு வாரமும் நகை செட் மற்றும் அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கான வாட்ச் போன்ற ஆடம்பர பரிசுகளை வெற்றியாளர்களுக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெற உள்ள இந்த பிரச்சாரத்தில் தங்கம், நகைகள் அல்லது வாட்ச் போன்றவற்றை விற்கும் பிரச்சாரத்தில் பங்கேற்கக் கூடிய கடைகளில் 500 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் வாடிக்கையாளர்கள் வாராந்திர பரிசு டிராவில் நுழையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, வாடிக்கையாளர்கள் ஸ்டோரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, அவர்களின் கொள்முதல் ரசீதை பதிவேற்றி, ரேஃபிளை உள்ளிட வேண்டும்.
இதன் மூலம் சுமார் 180 க்கும் மேற்பட்ட கடைகளுடன், பிரத்யேக சலுகைகளை அனுபவிக்கலாம் மற்றும் வாராந்திர டிராவில் பங்கேற்கலாம், தங்க பெட்டகத்திலிருந்து ஆடம்பர நகை செட் மற்றும் வாட்ச் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், ஷாப்பிங் செய்பவர்கள் குறிப்பிட்ட ஸ்டோர்களில் 50% வரை சிறப்பு ரமலான் தள்ளுபடிகளை அனுபவிக்க முடியும்.
இதில் தனிஷ்க், மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ், ஜோயாலுக்காஸ் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பிரபரமான பிராண்டுகளின் வாசனை திரவியங்கள் என 90 க்கும் மேற்பட்ட வாசனை திரவிய கடைகள் சிறப்பு ரமலான் தள்ளுபடிகளை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel