ADVERTISEMENT

அமீரகம் வருவதற்கான விசிட் விசா பற்றி இந்தியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன…??

Published: 7 Mar 2025, 8:33 PM |
Updated: 7 Mar 2025, 8:33 PM |
Posted By: Menaka

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்க்கு வருகை தருகிறார்கள். மேலும் 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, இந்தியர்களின் முதல் 5 கனவு இடங்களில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கின்றது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அமீரக விசிட் விசாவை எப்படி பெறுவது என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் விசிட் விசா வகைகள், செலவு மற்றும் தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

ADVERTISEMENT

விசிட் விசாக்களின் வகைகள் மற்றும் கட்டணங்கள்:

1. குறுகிய கால சுற்றுலா விசா (ஒற்றை நுழைவு) – இது அமீரகத்திற்கு நுழைந்த நாளிலிருந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த விசாவின் செல்லுபடி காலத்தை நீட்டிக்க முடியாது. இந்த விசாவிற்கு 250 திர்ஹம்ஸ் செலவாகும்.
2. குறுகிய கால சுற்றுலா விசா (பல நுழைவு) – 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த விசாவையும் நீட்டிக்க முடியாது. இந்த விசாவைப் பெற 690 திர்ஹம்ஸ் செலவாகும்.
3. நீண்ட கால சுற்றுலா விசா (ஒற்றை நுழைவு) – 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த விசாவை நீட்டிக்க முடியாது. இந்த விசாவைப் பெற, 600 திர்ஹம்ஸ் செலவாகும்.
4. நீண்ட கால சுற்றுலா விசா (பல நுழைவு) – 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த விசாவும், நீட்டிக்க முடியாது. இந்த விசாவைப் பெற 1,740 திர்ஹம்ஸ் செலவாகும்.

தேவையான ஆவணங்கள்:

* குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
* குறைந்தபட்சம் 3,000 திர்ஹம்ஸ் சேமிப்பை காட்டும் வங்கி அறிக்கை.
* செல்லுபடியாகும் ஹோட்டல் முன்பதிவுகள்.

ADVERTISEMENT

இ- விசா மற்றும் அரைவல் விசா:

சில இந்தியர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகையின் போது விசா (visa on arrival) பெறலாம். இதற்காக, குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் பின்வரும் நாடுகளில் ஒன்றிலிருந்து செல்லுபடியாகும் விசா, ரெசிடென்ஸ் அனுமதி அல்லது கிரீன் கார்டு வைத்திருக்க வேண்டும். அவை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அல்லது கனடா போன்ற நாடுகளாகும்.

ICP இன் படி, மேற்கண்ட நாடுகளில் இருந்து செல்லுபடியாகும் அனுமதிகளுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு 14 நாள் நுழைவு விசாவை வழங்குவதற்கு 100 திர்ஹம்ஸ் செலவாகும். மேலும், 14 நாட்களுக்கு விசா நீட்டிப்புக்கு 250 திர்ஹம்ஸ் செலவாகும். இதேபோல், 60 நாள் விசாவுக்கும் 250 திர்ஹம்ஸ் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel