ADVERTISEMENT

UAE: 5 திர்ஹம்ஸில் தொடங்கும் பொருட்களின் விலை.. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் ‘ஷார்ஜா ரமலான் நைட்ஸ்’ கண்காட்சி..!!

Published: 8 Mar 2025, 10:50 AM |
Updated: 8 Mar 2025, 11:10 AM |
Posted By: Menaka

அமீரகத்தில் ரமலானை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு மார்க்கெட்டுகள், சலுகைகள், தள்ளுபடிகள் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் ‘ரமலான் நைட்ஸ்’ கண்காட்சி அதன் 42வது பதிப்பிற்குத் திரும்பியுள்ளது. இந்த கண்காட்சி ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களை ஈர்த்து வருவதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

ஆடம்பர ஆடைகள் மற்றும் காலணிகள் முதல் வாசனை திரவியங்கள், வீட்டுப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் வரை பல்வேறு வகையான பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடியுடன், பார்வையாளர்களுக்கு தவிர்க்க முடியாத சலுகைகள் இங்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பொருட்களின் விலைகள் 5 திர்ஹம்ஸில் தொடங்குவதால், ஏராளமான ஷாப்பிங் ஆர்வலர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஷார்ஜா வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் (SCCI) ஆதரவுடன் ஷார்ஜாவின் எக்ஸ்போ சென்டரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி தினமும் மாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 30 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, 35வது ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவலின் (Sharjah Ramadan Festival) ஒரு பகுதியாகும், இதில் 200க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் 500க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச பிராண்டுகளைக் காட்சிப்படுத்துகின்றனர்.

ADVERTISEMENT

Up to 80% discount: This Ramadan market in Sharjah offers luxury items starting at Dh5

ஷாப்பிங்கிற்கு கூடுதலாக, கண்காட்சி பல்வேறு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வழங்குகிறது, இதில் பாரம்பரிய கருப்பொருள் நிகழ்ச்சிகள், பாரம்பரிய தயாரிப்புகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் எமிராட்டி மற்றும் ரமலான் உணவு வகைகளை காட்சிப்படுத்தும் ஒரு பிரத்யேக ஹெரிடேஜ் வில்லேஜ் ஆகியவை அடங்கும். இது பார்வையாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. அத்துடன் இங்கு கிட்ஸ் கார்னர், இஃப்தார் கார்னர் போன்ற சிறப்புப் பிரிவுகளும் பார்வையாளர்களுக்காக இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது, இந்த கண்காட்சி ரமலான் மாதத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் 150,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை இந்த கண்காட்சி ஈர்க்கிறது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் அதேநேரத்தில்  ‘சமூகத்தின் ஆண்டின்’ ஒரு பகுதியாக சமூக உணர்வை வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel