ஐக்கிய அரபு அமீரகத்தில் ஃப்ரீலான்ஸர்களாக பணிபுரியும் குடியிருப்பாளர்கள் அவர்களின் திறன்கள் மற்றும் அனுபவத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1,000 அமெரிக்க டாலர் (Dh3,600) வரை ஊதியம் பெறுவதாக புதிய அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த தகவல் குறித்து தனிப்பட்ட திறமை (self talented) தளமான அவுட்சைஸ்டு வெளியிட்ட ‘2025 டேலண்ட் ஆன் டிமாண்ட்’ அறிக்கையில், தற்சமயம் ஃப்ரீலான்ஸர்கள் அதிகம் தேவையுள்ள முதன்மையான திறன்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஃப்ரீலான்ஸராக பணிபுரியும் குடியிருப்பாளர்களின் ஒரு நாள் சம்பளம் $300 (Dh1,100) இலிருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது.
தேவையில் உள்ள சிறந்த திறன்கள்:
- கார்டுகள் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட்
- ப்ரோடக்ட் அண்ட் ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்
- டேட்டா அனலிட்டிக்ஸ்
- பிசினஸ் டெவலப்மென்ட்
- ரிஸ்க் மேனேஜ்மென்ட்
ஃப்ரீலான்ஸர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?
- 11-15 ஆண்டுகள் வரை அனுபவம் வாய்ந்த வல்லுநர்களின் சம்பளம் ஒரு நாளைக்கு: $725 முதல் $875 வரை
- தரவு மற்றும் பகுப்பாய்வு ஃப்ரீலான்ஸர்களின் சம்பளம் ஒரு நாளைக்கு: $225 முதல் $750 வரை
- தயாரிப்பு மேலாளர்களின் சம்பளம் அனுபவத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு: $175 முதல் $600 வரை
- வணிக மேம்பாட்டு நிபுணர்களின் சம்பளம் ஒரு நாளைக்கு: $425 முதல் $675 வரை
இதற்கிடையில், இந்தத் துறைகளில் ஏதேனும் ஒன்றில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மூத்த நிபுணர்கள் இன்னும் அதிகமாக சம்பாதிக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது, குறிப்பாக அவர்களுக்கு அரிய திறன்கள் இருந்தால் அதிக ஊதியம் வசூலிக்கலாம் என்றும் அந்த அறிகலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
UAE ஃப்ரீலான்ஸிங் சந்தையின் வளர்ச்சி:
அமீரகத்தின் ஃப்ரீலான்ஸிங் சந்தை ஒவ்வொரு ஆண்டும் 10% வளர்ந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், பல தொழில் வல்லுநர்கள் ஃப்ரீலான்ஸிங்கை தீவிரமான தொழில் விருப்பமாக தேர்வு செய்வதாகவும், அதேசமயம் நிறுவனங்கள் நெகிழ்வான, குறுகிய கால திட்டங்களுக்கு திறமையான ஃப்ரீலான்ஸர்களை விரும்புவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிக தேவை, குறைந்த சப்ளை:
எவ்வாறாயினும், திறமையான ஃப்ரீலான்ஸர்களின் பற்றாக்குறை அமீரகத்தில் நிலவுவதாகவும், மேலும் இங்கு அவர்களின் சம்பளம் தென்னாப்பிரிக்கா அல்லது இந்தியா போன்ற நாடுகளை விட அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, வணிகங்கள் விரைவான, உயர்தர வேலைக்கு நீண்ட கால ஒப்பந்தங்கள் இல்லாமல் ஃப்ரீலான்ஸர்களை விரும்புவதாக கூறப்பட்டுள்ளது.
UAE-யில் ஃப்ரீலான்ஸர் விசா விருப்பங்கள்:
ஐக்கிய அரபு அமீரகம் ஃப்ரீலான்ஸர்களுக்கு பல விசா மற்றும் வதிவிட விருப்பங்களை வழங்குகிறது. 2022 ஆம் ஆண்டில், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு ஸ்பான்சர் தேவையில்லாமல் ஐந்து வருட கிரீன் விசாவை அமீரகம் அறிமுகப்படுத்தியது.
அதிகாரியின் கூற்றுப்படி, துபாய் மீடியா சிட்டி (DMC) மற்றும் துபாய் இன்டர்நெட் சிட்டி (DIC) போன்ற பல்வேறு இலவச மண்டலங்கள் (free zones) மூலம் ஃப்ரீலான்ஸர்கள் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விசாவுக்கான செலவு 2,000 திர்ஹம் முதல் 12,000 திர்ஹம் வரை ஆகலாம் மற்றும் ஒப்புதல் செயல்முறை பொதுவாக 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel