துபாயில் சொகுசு மற்றும் ஆடம்பர வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ‘Takamul Permit’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி நகரத்தில் லிமோசைன் நிறுவனங்களுக்கும் கார் வாடகை சேவைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
RTAவின் வணிக போக்குவரத்து நடவடிக்கைகளின் இயக்குனர் ஜமால் அல் சதாவின் கூற்றுப்படி, இந்த சேவை கார் வாடகை துறையுடன் ஆடம்பர போக்குவரத்தை ஒருங்கிணைக்க உதவுகிறது, தனிநபர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஒரு மாதம் வரை ஓட்டுனர்களுடன் ஆடம்பர கார்களை வாடகைக்கு எடுக்க இது அனுமதிக்கிறது என கூறப்பட்டுள்ளது.
புதிய நடைமுறைகள்
இந்த புதிய தகாமுல் அனுமதி கார் வாடகைக்கு ஒரு நெகிழ்வான ஒழுங்குமுறை கட்டமைப்பை வழங்குகிறது என்பதையும் அல் சதா சுட்டிக்காட்டியுள்ளார். RTA இன் அதிகார வரம்பின் கீழ் அனைத்து கார் வாடகை நடவடிக்கைகளையும் நிர்வகிக்க புதுப்பிக்கப்பட்ட விதிகளுடன், வாடகை நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான மென்மையான தொடர்புகளை இது உறுதி செய்யும் என்றும் கூறியுள்ளார்.
அதிகாரியின் கூற்றுப்படி, இந்த சேவையைப் பயன்படுத்த, நிறுவனங்கள் வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்தல், போக்குவரத்து நிறுவனங்களைச் சேர்ப்பது (enrolling deluxe transport companies) மற்றும் RTAவின் மின்னணு அமைப்பில் (TARS-Transport Activities Rental System) டிரைவர்களை பட்டியலிடுவது உள்ளிட்ட குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் இந்த சேவையைப் பெற, கார் வாடகை மற்றும் சொகுசு போக்குவரத்து நிறுவனங்கள் இரண்டும் அந்தந்த வணிக உரிமங்களில் பட்டியலிடப்பட்ட ஒரு பகிரப்பட்ட உறுப்பினரைக் கொண்டிருக்க வேண்டும். ஆன்லைன் செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் RTA வலைத்தளத்தின் மூலம் எளிதாக அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel