ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ஈத் அல் ஃபித்ர் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில், பொது போக்குவரத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம், குடியிருப்பாளர்களுக்கு சுமூகமான விடுமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஷார்ஜா எமிரேட் ஒரு விரிவான செயல்பாட்டுத் திட்டத்தை வகுத்துள்ளது.
போக்குவரத்து மற்றும் இயக்கம்
- ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) ஈத் விடுமுறையின் போது 7,000 இன்டர்சிட்டி பேருந்து பயணங்களை (bus trips) இயக்குவதாக அறிவித்துள்ளது. இது போக்குவரத்து அதிகமுள்ள உச்ச நேரங்களில் காத்திருப்பு நேரத்தை வெறும் ஐந்து நிமிடங்களாகக் குறைக்கும்.
- 12 பேருந்து வழித்தடங்களில் (மஸ்கட்டுக்கு பிரபலமான ரூட் 203 உட்பட) 104 பேருந்துகளுடன் தினமும் 1,144 பயணங்களை இயக்கும்.
- ஷார்ஜா மற்றும் துபாய் இடையே தினசரி எட்டு கடல் பயணங்கள் இயக்கப்படும் என்பதையும் ஆணையம் வெளிப்படுத்தியுள்ளது.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
அதிகாரசபை வெளியிட்ட அறிவிப்பின் படி, பண்டிகைக் காலத்தில் எமிரேட்டில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக 134 ஆய்வாளர்கள் உணவு நிறுவனங்கள், சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை கண்காணிப்பார்கள்.
மேலும், 186 ஆய்வாளர்கள் கடற்கரை பகுதிகளை மேற்பார்வையிடுவார்கள், அதிகரித்த உயிர்காக்கும் பாதுகாப்புடன் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.
ஷார்ஜாவின் பொது பூங்காக்கள் குடும்பங்கள் ஒன்றுகூடி கொண்டாட அமைதியான இடங்களை வழங்குகின்றன. நகராட்சியானது 993 என்ற 24/7 ஹாட்லைன் மூலம் பொது விசாரணைகள் மற்றும் அறிக்கைகளைக் கையாள பதிலளிக்கும் குழுக்களை அமைத்துள்ளது.
இலவச பார்க்கிங்
ஷார்ஜா எமிரேட்டில் நீல அடையாளங்களால் குறிக்கப்பட்ட கட்டண மண்டலங்களைத் தவிர, ஈத் அல் ஃபித்ரின் முதல் மூன்று நாட்களுக்கு (ஷவ்வால் 1 முதல் 3 வரை) பொது பார்க்கிங் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை நாட்களிலும் அவை வழக்கம் போல் செயல்படும். விதிமீறல்களைக் கண்காணிக்கவும், பார்க்கிங் இடங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் ஆய்வுக் குழுக்கள் நிறுத்தப்படும் என்று ஷார்ஜா முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.
அஜ்மான்
ஷார்ஜாவைப் போலவே, அஜ்மான் எமிரேட்டிலும் இலவச பார்க்கிங் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அஜ்மான் முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிவிப்பின் படி, ஷவ்வால் 1 முதல் 3 வரை ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் போது அஜ்மானில் உள்ள அனைத்து கட்டண வாகன நிறுத்துமிடங்களையும் இலவசமாக அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel