ஷார்ஜாவில் உணவகங்கள், மால்களில் உள்ள உணவகங்கள் உட்பட அனைத்து உணவகங்களும் ரமலான் மாதத்தில் பகலில் உணவு தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்குத் தேவையான அனுமதிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில் இரவில் தாமதமாக செயல்பட விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்.
கூடுதலாக, ஷார்ஜா அதிகாரசபையால் தொடங்கப்பட்ட ஷார்ஜா உணவு பாதுகாப்பு திட்டம் (SFSP) அனைத்து உணவு வணிகங்களுக்கும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உணவு கையாளுதல் குறித்து பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளது. இது வணிகங்கள் அங்கீகரிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு மேலாண்மை முறையைப் பின்பற்றுவதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் உணவகங்களிலும் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் ஷார்ஜாவில் சுகாதார விதிகளைப் பின்பற்றாததற்காக இரண்டு பிரபலமான சமையல் இடங்களை மூடியுள்ளதாக ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டி வியாழக்கிழமை அறிவித்தது. இந்த இடங்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சுகாதாரத் தரங்களை மீறியதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும் ஷார்ஜா முனிசிபாலிட்டியானது ரமலான் மாதம் துவங்குவதற்கு முன்பாகவே 5,500 க்கும் மேற்பட்ட உணவு வணிகங்களை ஆய்வு செய்துள்ளதாகவும், மேலும் இந்த சோதனைகள் தொடர்வதாகவும் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. மேலும், ரமலான் காலத்தில் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஆய்வுகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel