ADVERTISEMENT

UAE: எமிரேட் முழுவதும் SMS பார்க்கிங் கட்டண முறை ஒருங்கிணைப்பு.. அறிவிப்பை வெளியிட்ட ஷார்ஜா முனிசிபாலிட்டி..!!

Published: 7 Mar 2025, 5:47 PM |
Updated: 7 Mar 2025, 5:47 PM |
Posted By: Menaka

ஷார்ஜா எமிரேட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் பொது பார்க்கிங் இடங்களுக்கான SMS கட்டண முறையானது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக நேற்று (மார்ச் 6, வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோர் ஃபக்கானுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட ‘KH’ ​​நகர குறியீடு, இந்த புதுப்பிப்பின் ஒரு பகுதியாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஷார்ஜா முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கை ஷார்ஜா முழுவதும் பொது பார்க்கிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் திறமையான சேவையை வழங்குவதற்கும் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதி என்பதையும் குடிமை அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.

ஷார்ஜா முனிசிபாலிட்டி தெரிவித்ததன் அடிப்படையில் வாகன ஓட்டிகள் இப்போது பார்க்கிங் செய்வதற்கு 5566 என்ற எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பலாம். அதில் வாகன எண், பார்க்கிங் நேரம் மற்றும் பார்க்கிங் நேரம் ஆகியவற்றை இங்கே காட்டப்பட்டுள்ளது போல் குறிப்பிடலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Photo: Sharjah municipality/X

ஷார்ஜா எமிரேட்டானது 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து, அதன் பார்க்கிங் அமைப்பில் ஏழு நாள் பார்க்கிங் மண்டலங்கள், ஸ்மார்ட் பார்க்கிங் அமைப்பு மற்றும் அல் தைத் மற்றும் கல்பா நகரங்களில் பார்க்கிங் கட்டணங்கள் உட்பட பல மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது. கூடுதலாக, அல் கான் மற்றும் அல் நாத் போன்ற பகுதிகளில் மொத்தம் 392 இடங்களைக் கொண்ட இரண்டு ஸ்மார்ட் பார்க்கிங் பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கடந்த வாரம், ஷார்ஜா ‘Mawqef’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியது, இது பயனர்கள் பார்க்கிங் கட்டணங்களை செலுத்தவும், சரிபார்க்கவும் மற்றும் அபராதங்களை செலுத்தவும் அனுமதிக்கிறது. இந்த செயலியில் சந்தா செலுத்தக்கூடிய மண்டலங்கள் மற்றும் ஸ்மார்ட் பார்க்கிங் பகுதிகளைக் கண்டறிய உதவும் வரைபடங்கள் உள்ளன. மேலும் இது பயனர்களுக்கு அவர்களின் பார்க்கிங் பயன்பாடு மற்றும் சந்தா புதுப்பித்தல்கள் குறித்த அறிவிப்புகளையும் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel