ADVERTISEMENT

ரமலான் மாதத்திற்கு தயார் நிலையில் ஷேக் சையத் கிராண்ட் மசூதி..!! ஏற்பாடுகளை வெளியிட்ட நிர்வாகம்..!!

Published: 1 Mar 2025, 3:49 PM |
Updated: 1 Mar 2025, 3:58 PM |
Posted By: Menaka

அபுதாபியில் அமைந்துள்ள ஷேக் சையத் கிராண்ட் மசூதி மையம் (Sheikh Zayed Grand Mosque Centre) ரமலான் மாதத்திற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மேலும் வழிபாட்டாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வசதியான மற்றும் அமைதியான சூழலை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு வசதிகளுடன் தயாராகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் ரமலான் மாதத்தில் திரண்டு வரும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கு இடமளிக்க, இந்த மசூதி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு உட்பட 8,000 க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வழிபாட்டாளர்கள் பயணிப்பதற்கும் சேவைகளை வழங்குவதற்கும் 70 க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரமலான் மாதத்தில், வழிபாட்டாளர்கள் எளிதாக மசூதியை அணுக அனுமதிக்க பிரதான நுழைவாயில், அல் ரஹ்மா கேட், இமான் கேட், கோர்வென்ஸ் கேட் மற்றும் அல் நூர் கேட் உள்ளிட்ட அனைத்து மசூதி நுழைவுகளும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மஹ்ரிப் நேரத்தில் இந்த வாயில்கள் திறக்கப்படும்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு, ஷேக் சையத் மசூதி ரமலான் மாதத்தில் சுமார் 1.6 மில்லியன் பார்வையாளர்களைக் கண்டது. மேலும் இங்கு வந்த வழிபாட்டாளர்களுக்கு 8,379 பார்க்கிங் இடங்களையும் வழங்கியது. இந்த ஆண்டு மக்களுக்கு இன்னும் வசதியை உறுதி செய்யும் வகையில் 1,800 கூடுதல் பார்க்கிங் இடங்களைச் சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், கடந்த வருடத்தில் எர்த் அபுதாபி ஹோட்டலுடன் (Erth Abu Dhabi Hotel) இணைந்து, ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நேரத்தில் தினமும் 35,000 இஃப்தார் உணவும் வழங்கப்பட்டது. ஷேக் சையத் மசூதியில் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த இஃப்தார் உணவானது கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டு, கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel