அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டி ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர் முழுவதும் அதன் இறைச்சிக்கூடங்கள் திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும், அதன் வசதிகள் முழுவதும் சேவை தரத்தை மேம்படுத்த பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அபுதாபி போர்ட்டில் உள்ள தானியங்கி இறைச்சிக்கூடம், பனியாஸ் இறைச்சிக்கூடம், அல் ஷஹாமா இறைச்சிக்கூடம் மற்றும் அல் வத்பா இறைச்சிக்கூடம் ஆகியவை அடங்கும் எனவும் அபுதாபி முனிசிபாலிட்டி கூறியுள்ளது.
இது தொடர்பாக அதிகாரம் வெளியிட்ட அறிக்கையின் படி, முனிசிபாலிட்டியால் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பொது இடங்கள், வீடுகள் அல்லது தெருக்களில் விலங்குகளை பலியிட அனுமதி இல்லை எனவும், அவ்வாறு செய்தால் அறுக்கப்பட்ட விலங்குகளை உடனடியாக பறிமுதல் செய்வதுடன் நிதி அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பொது பூங்காக்கள் அல்லது குடியிருப்பு பகுதிகள் போன்ற அங்கீகரிக்கப்படாத இடங்களில், குறிப்பாக ஈத் அல் அதாவின் போது பலியிடும் விலங்குகளை அறுக்கும் குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அபுதாபியில் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்காணிக்கவும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நகராட்சி சிறப்பு ஆய்வாளர்களுடன் மொபைல் ரோந்துகளை ஈடுபடுத்துவதாகவும் கூறியுள்ளது.
மேலும், உரிமம் பெறாத கசாப்புக் கடைக்காரர்களால் வழங்கப்படும் சட்டவிரோத சேவைகளை நாடுவதைத் தவிர்க்குமாறும் அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டி சமூகத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் வலியுறுத்தியுள்ளது.
இறைச்சி கூடங்கள் திறந்திருக்கும் நேரம்
பரபரப்பான பண்டிகைக் காலத்தில் குடியிருப்பாளர்களின் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்வதற்காக, இறைச்சி கூடங்கள் தினமும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும், மேலும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு இடமளிக்க காலை 11:30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ரமலான் காலத்தில் பலியிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் என்று நகராட்சி எதிர்பார்க்கிறது. அதாவது செம்மறி ஆடுகள், மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் உட்பட 80,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் பலியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புனித மாதத்தில் இறைச்சிக் கூடங்களில் சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதற்கும் உயர் தரங்களைப் பராமரிப்பதற்கும், நகராட்சி சிறப்பு இறைச்சி கடைக்காரர்கள் உட்பட பணியாளர்களை அதிகரித்துள்ளது, மேலும் பலியிடுவதற்கு முன்னும் பின்னும் விலங்குகளை முழுமையாக பரிசோதனைகள் நடத்த கால்நடை மருத்துவக் குழுவை நியமித்துள்ளது. இது அனைத்து இறைச்சிகளும் நுகர்வுக்கான மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel