ADVERTISEMENT

UAE: சுற்றுலாப்பயணிகளுக்கு 10 GB இலவச டேட்டாவுடன் சிம் கார்டு, முக்கிய இடங்களில் 15% தள்ளுபடி.. புதிய பாஸை அறிவித்துள்ள அபுதாபி..

Published: 7 Mar 2025, 3:44 AM |
Updated: 7 Mar 2025, 8:08 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது புதிய ‘அபுதாபி பாஸை’ அனுபவிக்கலாம் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸானது 10 GB டூரிஸ்ட் சிம் கார்டு, தள்ளுபடிகள் மற்றும் அபுதாபி முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் சிறப்பு கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

ADVERTISEMENT

அபுதாபியின் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை (DCT அபுதாபி) மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகியவற்றால் ITB பெர்லின் சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாஸ் இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் எதிஹாட் பயணிகள் உட்பட அனைத்து சுற்றுலாவாசிகளுக்கும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நன்மைகள்:

  • டூரிஸ்ட் சிம் கார்டுடன் 10 GB டேட்டா.
  • பொது பேருந்துகள் மற்றும் முக்கிய நகர இடங்களை உள்ளடக்கிய ஹாப்-ஆன்-ஹாப்-ஆஃப் சுற்றுலா பேருந்து நெட்வொர்க்கிற்கு அன்லிமிட்டட் அணுகல்.
  • கஸ்ர் அல் வதன் (qasr al watan) மற்றும் லூவ்ரே அபுதாபி (louvre abudhabi) போன்ற சிறந்த கலாச்சார இடங்களில் 15% தள்ளுபடிகள்.
  • ஃபெராரி வேர்ல்ட் (ferrari world), வார்னர் பிரதர்ஸ் வேர்ல்ட், சீ வேர்ல்ட் யாஸ் ஐலேண்ட் மற்றும் யாஸ் வாட்டர் வேர்ல்ட் உள்ளிட்ட யாஸ் ஐலேண்ட் இடங்களில் சிறப்பு கட்டணங்கள்.
  • அபுதாபி முழுவதும் 200க்கும் மேற்பட்ட உணவகங்களில் சலுகைகள், பாலைவன சஃபாரிகள் (desert safari) மற்றும் வழிகாட்டப்பட்ட நகர சுற்றுப்பயணங்கள் போன்ற செயல்பாடுகளில் சேமிப்பை வழங்குகிறது.

மேலும், எதிஹாட் பயணிகள் இதற்காக கூடுதல் கட்டணம் அல்லது செயலியைப் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை, பிரத்யேக வலைத்தளம் வழியாக பாஸை அணுகுவதற்கான இணைப்புடன் கூடிய ஈமெயிலைப் பெறுவார்கள் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதே போன்று 10GB டேட்டாவுடன் கூடிய இலவச சிம் துபாய்க்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel