ADVERTISEMENT

UAE: ரெட் சிக்னலை தாண்டியதால் ஏற்பட்ட 271 விபத்துகள்.. புள்ளிவிபரங்களை வெளியிட்ட அமைச்சகம்..

Published: 27 Mar 2025, 10:01 AM |
Updated: 27 Mar 2025, 10:01 AM |
Posted By: Menaka

2024 ஆம் ஆண்டில் பதிவான போக்குவரத்து விபத்துக்கள் குறித்த புள்ளிவிவரங்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட விபத்துகளுக்கு சிக்னலில் சிவப்பு விளக்கைத் தாண்டுவதே முக்கிய காரணம் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

ADVERTISEMENT

இந்த புள்ளிவிபரங்களின் படி, அமீரகம் முழுவதும் 271 விபத்துக்கள் ரெட் சிக்னல் மீறல்களால் ஏற்பட்டுள்ளன. அபுதாபியில் அதிகபட்சமாக 153 சம்பவங்களும், அதைத் தொடர்ந்து துபாயில் 111 சம்பவங்களும், ராஸ் அல் கைமா மற்றும் உம் அல்-குவைனில் தலா மூன்று சம்பவங்களும், ஷார்ஜாவில் ஒரு சம்பவமும் நடந்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்துச் சட்டத்தின்படி, சாலை விதிகளை மதிக்காமல் ரெட் சிக்னலை தாண்டுபவர்களுக்கு 1,000 திர்ஹம்ஸ் அபராதம், 12 ப்ளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படுவதுடன் வாகனம் 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும். குறிப்பாக, துபாய் மற்றும் அபுதாபியில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க கூடுதலாக 50,000 திர்ஹம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

உரிமம் பெறாத ஓட்டுநர்கள்

உரிமம் பெறாத ஓட்டுநர்களால் ஏற்படும் 67 விபத்துகள் குறித்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அபுதாபியில் அதிகபட்சமாக  55 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் ஷார்ஜாவில் 7, உம் அல்-குவைனில் மூன்று மற்றும் ஃபுஜைராவில் இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஓட்டுநர்கள் சாலைகளை ஒழுங்காக கவனியாமல் பிரதான சாலைகளில்  இணைந்ததால் 223 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அபுதாபியில் (129) நிகழ்ந்துள்ளன. ஃபுஜைராவில் 33, ராஸ் அல் கைமாவில் 26, ஷார்ஜாவில் 19, உம் அல் கைனாவில் 12 மற்றும் அஜ்மானில் நான்கு விபத்துகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

டயர் வெடிப்புகள் மற்றும் இயந்திரக் கோளாறுகள்

இயந்திரக் கோளாறுகள் மற்றும் டயர் வெடிப்புகளால் விபத்துகள் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அபுதாபியில் 26, துபாயில் 8 மற்றும் ராஸ் அல் கைமாவில் மூன்று விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

தவறான திசையில் வாகனம் ஓட்டுதல்

தவறான திசையில் வாகனம் ஓட்டியதால் அபுதாபியில் 16 விபத்துகளும், ஃபுஜைராவில் இரண்டு விபத்துகளும் ஏற்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதேநேரத்தில், பாதசாரிகளுக்கு வழிவிடத் தவறியது 96 விபத்துகளுக்கு வழிவகுத்துள்ளது. அபுதாபியில் அதிகபட்சமாக 37 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து துபாய் 34, ராஸ் அல் கைமாவில் எட்டு, புஜைராவில் 15 மற்றும் ஷார்ஜாவில் இரண்டு விபத்துகள் ஏற்பட்டன.

மிகவும் பொதுவான விபத்துக்கான காரணங்கள்:

1. அலட்சியம் மற்றும் கவனக்குறைவு
2. திடீர் வளைவுகள்
3. சிவப்பு விளக்குகளை மீறுதல்
4. கவனச்சிதறல்கள்
5. பாதசாரிகளுக்கு வழிவிடத் தவறுதல்
6. வேகம்
7. போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டுதல்
8. சாலையை கவனிக்காமல் பின்னோக்கிச் செல்லுதல்

சாலை விபத்துக்களைக் குறைக்க உதவும் வகையில், ஓட்டுநர்கள் போக்குவரத்துச் சட்டங்களைப் பின்பற்றவும், விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் அமைச்சகம் வலியுறுத்துகிறது. மேலும் விபத்துகளைத் தடுக்க கடுமையான அமலாக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel