ADVERTISEMENT

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு: தொடர்ந்து முன்னணி இடத்தை தக்க வைக்கும் அமீரகம்!!

Published: 25 Mar 2025, 8:13 PM |
Updated: 25 Mar 2025, 8:28 PM |
Posted By: Menaka

உலகளவில் பாதுகாப்பிற்காகப் பெயர் பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் 84.5 பாதுகாப்பு மதிப்பெண்ணுடன் உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக 2025 ஆம் ஆண்டு Numbeo பாதுகாப்பு குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறைந்த குற்ற விகிதங்கள், திறமையான சட்ட அமலாக்கம் மற்றும் உயர்மட்ட பொது சேவைகளுடன் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்கும் அமீரகம், அதன் கடுமையான சட்டங்கள் மற்றும் பாதுகாப்பிற்கான வலுவான அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றது. வேலை செய்ய மற்றும் பயணிக்க ஏற்ற இடமாகத் திகழ்வதுடன் உலகின் பாதுகாப்பான நாடுகளில் தொடர்ந்து தரவரிசையில் முன்னிலை வகிக்கிறது.

ஆன்லைன் தரவு தளமான Numbeo வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி சுமார் 84.7 மதிப்பெண்களுடன் அன்டோரா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் வளைகுடா நாடான கத்தார் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மற்றுமொரு வளைகுடா நாடான ஓமானும் ஐந்தாவது இடத்தைப் பிடித்து, முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், 2025 குற்றக் குறியீட்டில் மிகக் குறைந்த குற்ற விகிதத்தைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, இது உலகளவில் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக அதன் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்துகிறது.

Numbeo இன் தரவரிசை, பாதுகாப்பு மற்றும் குற்றக் குறியீடுகளைத் தொகுக்க குற்ற நிலைகள், பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் குற்றத்தில் தனிப்பட்ட அனுபவங்கள் பற்றி கேட்கும் பயனர்களுடன் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளை அடிப்படையாகக் கொண்டது. 2025 பாதுகாப்பு குறியீட்டின்படி, முதல் 20 பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

1. அன்டோரா – 84.7
2. ஐக்கிய அரபு அமீரகம் – 84.5
3. கத்தார் – 84.2
4. தைவான் – 82.9
5. ​​ஓமன் – 81.7
6. மாண் தீவு (isle of man) – 79.0
7. ஹாங்காங் – 78.5
8. ஆர்மீனியா – 77.9
9. சிங்கப்பூர் – 77.4
10. ஜப்பான் – 77.1
11. மொனாக்கோ – 76.7
12. எஸ்டோனியா – 76.3
13. ஸ்லோவேனியா – 76.2
14. சவுதி அரேபியா – 76.1
15. சீனா – 76.0
16. பஹ்ரைன் – 75.5
17. தென் கொரியா – 75.1
18. குரோஷியா – 74.5
19. ஐஸ்லாந்து – 74.3
20. டென்மார்க் – 74.0

இந்த தரவரிசை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற GCC நாடுகளை வாழ்வதற்கும் பயணிப்பதற்கும் மிகவும் பாதுகாப்பான இடங்களாக எடுத்துக்காட்டுவதாக பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel