ADVERTISEMENT

UAE: கிடுகிடுவென உயரும் விமானக் கட்டணங்கள்.. ஆகஸ்ட் வரை நீடிக்கும் என தகவல்..!!

Published: 18 Mar 2025, 6:06 PM |
Updated: 18 Mar 2025, 6:08 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈகைத் திருநாளான ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு நீண்ட வாரயிறுதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு வசந்த கால விடுமுறை நாட்கள் வருவதால் சொந்த மற்றும் வெளிநாடுகளுக்கு பயணிக்கத் திட்டமிடும் அமீரகக் குடியிருப்பாளர்கள் விரைவில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது நல்லது என்று பயணத்துறை நிர்வாகிகள் பரிந்துரைக்கின்றனர்.

ADVERTISEMENT

விடுமுறைக்காலத்தில் அதிகரித்த பயணத்தேவை காரணமாக இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களுக்கான விமானக் கட்டணங்கள் 30-50% அதிகரித்துள்ளதாகவும், மேலும் குறைந்தபட்சம் ஆகஸ்ட் 2025 வரை விலைகள் அதிகமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

விமானக் கட்டணங்கள் ஏன் அதிகமாக உள்ளன?

ஈத் மற்றும் பள்ளி விடுமுறைகள் ஒரே நேரத்தில் வருவதால் பெரிய பயணத் தேவை உருவாகியுள்ளது. இந்நிலையில், விமான நிறுவனங்கள் விமானங்களின் இயக்கங்களை அதிகரிக்காதது மற்றும் உலகளாவிய விமான விநியோக தாமதங்கள் ஆகியவற்றால் விமான டிக்கெட்டுகளின் விலை உச்சத்தை நோக்கி செல்வதாக பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

ரமலான் காரணமாக வணிகப் பயணம் தற்காலிகமாக சுமார் 30 சதவீதம் மந்தநிலையைக் கண்டாலும், ரமலானின் மூன்றாவது வாரத்தில் இது மீண்டும் வேகத்தை எட்டும் என்றும், வணிகப் பயணிகள் தங்கள் வேலைப் பயணங்களை குடும்ப விடுமுறை நாட்களுடன் இணைப்பார்கள் என்பதால் டிக்கெட் விலை நிலையாக அதிகரிக்கும் என்றும் பயணத்துறை நிர்வாகிகள் யூகித்துள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி, குடும்பப் பயணங்களுடன், சுவிட்சர்லாந்து, இத்தாலி, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியா போன்ற நாடுகளுக்கு அதிக தேவை உள்ளதால், ஆகஸ்ட் இறுதி வரை விமானக் கட்டணங்கள் மேல்நோக்கி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

விலைகள் எப்போது குறையும்?

இதற்கிடையில், சில விமான நிறுவனங்கள் உயரும் கட்டணங்களை ஈடுசெய்ய விமான திறனை அதிகரித்து வருகின்றன. புதிய வழித்தடங்கள் மற்றும் கூடுதல் விமானங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, இது காலப்போக்கில் விலை உயர்வைக் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.

2025 மற்றும் அதற்குப் பிறகான நிலைமை

  • எரிபொருள் செலவுகள் மற்றும் பணவீக்கம் காரணமாக 2025 இல் விமானக் கட்டணங்கள் 2-14% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த செலவுகளை நிர்வகிக்க வணிகப் பயணிகள் வேலை மற்றும் ஓய்வு பயணங்களை இணைப்பதன் மூலம் புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து வருவதாக பயண முகவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே, விடுமுறைக்கு சொந்த நாடுகளுக்கு  பயணம் செய்கிறீர்கள் என்றால், அதிக கட்டணங்களை செலுத்துவதைத் தவிர்க்க உங்கள் டிக்கெட்டுகளை இப்போதே முன்பதிவு செய்வது நல்லது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel