ADVERTISEMENT

வெளிநாட்டவர்களுக்கு அமீரக அரசு வழங்கும் ‘Business Opportunities Visa’..!! முழுவிபரங்களும் இங்கே…!!

Published: 5 Mar 2025, 6:05 PM |
Updated: 5 Mar 2025, 6:19 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய அல்லது புதிய வணிக வாய்ப்புகளை ஆராய விரும்புபவர்களுக்கு, ‘UAE ​​இன் வணிக வாய்ப்புகள் விசா (Business Opportunities Visa)’ சரியான தேர்வாக இருக்கலாம். இந்த விசா முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், திறமையான வல்லுநர்கள் மற்றும் அமீரகத்தை தளமாகக் கொண்ட ஸ்பான்சரின் தேவை இல்லாமல் அமீரகத்தில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய விரும்பும் வணிக நிதியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி அளவுகோல்கள், ஆவணங்கள் உட்பட விண்ணப்பச் செயல்முறைக்கான அனைத்து விபரங்களையும் பின்வருமாறு பார்க்கலாம்.

Business Opportunities விசாவின் முக்கிய அம்சங்கள்:

  • நெகிழ்வான கால அளவுகள்: விண்ணப்பதாரர்கள் தங்கள் தேவைகளைப் பொறுத்து 60-நாள், 90-நாள் அல்லது 120-நாள் செல்லுபடியாகும் காலத்தைத் தேர்வு செய்யலாம்.
  • ஒற்றை அல்லது பல நுழைவு (single or multi entry): விசா உங்கள் தொழில் மற்றும் தகுதியைப் பொறுத்து ஒற்றை-நுழைவு அல்லது பல-நுழைவு வருகையை அனுமதிக்கிறது.
  • உள்ளூர் ஸ்பான்சர் தேவையில்லை: அமீரகத்தை தளமாகக் கொண்ட ஸ்பான்சர் தேவையில்லாமல் நீங்கள் நேரடியாக விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா மற்றும் உம் அல் குவைன் ஆகிய இடங்களில் விசாவுக்கு விண்ணப்பிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) மூலமாகவோ அல்லது அமீரகத்தில் பதிவுசெய்யப்பட்ட டைப்பிங் சென்டர்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

தேவையான ஆவணங்கள்:

  • செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல்
  • தங்குமிட முகவரிச் சான்று (வாடகை ஒப்பந்தம் அல்லது ஹோட்டல் முன்பதிவு)
  • சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்
  • சான்றளிக்கப்பட்ட வங்கி அறிக்கை
  • சுகாதார காப்பீட்டு பாதுகாப்பு
  • சான்றளிக்கப்பட்ட தகுதிச் சான்றிதழ்
  • ரிட்டர்ன் டிக்கெட்

60 நாள் விசா விசா கட்டணம்:

  • கோரிக்கை கட்டணம் (request fee): 100 திர்ஹம்ஸ்
  • வெளியீட்டு கட்டணம் (issuance fee): 200 திர்ஹம்ஸ்
  • பாதுகாப்பு வைப்புத்தொகை (security deposit): 1,025 திர்ஹம்ஸ்
  • இ- சேவைகள் கட்டணம்: 28 திர்ஹம்ஸ்
  • ICP கட்டணம்: 22 திர்ஹம்ஸ்
  • ஸ்மார்ட் சேவைகள் கட்டணம்: 100 திர்ஹம்ஸ்
  • விசா காப்பீட்டு கட்டணம்: 80 திர்ஹம்ஸ்
  • மொத்தம்: 1,555 திர்ஹம்ஸ்

90 நாள் விசா கட்டணம்:

  • கோரிக்கை கட்டணம்: 100 திர்ஹம்ஸ்
  • வெளியீட்டு கட்டணம்: 300 திர்ஹம்ஸ்
  • பாதுகாப்பு வைப்புத்தொகை: 1,025 திர்ஹம்ஸ்
  • இ சேவைகள் கட்டணம்: 28 திர்ஹம்ஸ்
  • ICP கட்டணம்: 22 திர்ஹம்ஸ்
  • ஸ்மார்ட் சேவை கட்டணம்: 100 திர்ஹம்ஸ்
  • விசா காப்பீட்டு கட்டணம்: 100 திர்ஹம்ஸ்
  • மொத்தம்: 1,675 திர்ஹம்ஸ்

120 நாள் விசா கட்டணம்:

  • கோரிக்கை கட்டணம்: 100 திர்ஹம்ஸ்
  • வெளியீட்டு கட்டணம்: 400 திர்ஹம்ஸ்
  • பாதுகாப்பு வைப்புத்தொகை: 1,025 திர்ஹம்ஸ்
  • மின் சேவை கட்டணம்: 28 திர்ஹம்ஸ்
  • ICP கட்டணம்: 22 திர்ஹம்ஸ்
  • ஸ்மார்ட் சேவை கட்டணம்: 100 திர்ஹம்ஸ்
  • விசா காப்பீட்டு கட்டணம்: 120 திர்ஹம்ஸ்
  • மொத்தம்: 1,795 திர்ஹம்ஸ்

விண்ணப்ப செயல்முறை:

  1. ICP இன் ஸ்மார்ட் சேவைகள் போர்ட்டலைப் பார்வையிடவும்: (https://smartservices.icp.gov.ae)
  2. ‘Public Services’ என்பதன் கீழ் ‘Exploring Business Opportunities’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இப்போது உங்களுக்கு விருப்பமான விசா விருப்பத்தைத் தேர்வு செய்யவும்: 60-நாள், 90-நாள் அல்லது 120-நாள் விசா.
  4. நீங்கள் விரும்பிய காலத்தைத் தேர்ந்தெடுத்து ‘Start Service’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. அதில் விண்ணப்பதாரர் தகவல், அடையாளத் தகவல், தனிப்பட்ட தகவல், முகவரி விவரங்கள் உள்ளிட்டவிவரங்களுடன் ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  6. அடுத்தபடியாக, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.

இறுதியாக, விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து விசா கட்டணத்திற்கான பணம் செலுத்தவும். வெற்றிகரமாக இந்த செயல்முறைகள் அனைத்தையும் முடித்த பிறகு, உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்க ஒரு குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள்.

முக்கிய குறிப்புகள்:

  • பணத்தைத் திரும்பப் பெறுதல்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மட்டுமே, வழங்கல் கட்டணம், சுகாதார காப்பீடு மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகை போன்ற கட்டணங்கள் திரும்பப் பெறப்படும்.
  • விண்ணப்ப செல்லுபடியாகும் காலம்: தேவையான தரவு 30 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அல்லது முழுமையற்ற ஆவணங்கள் காரணமாக விண்ணப்பம் மூன்று முறை திருப்பி அனுப்பப்பட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT