ADVERTISEMENT

ஏப்ரல் முதல் துபாயில் பார்க்கிங் கட்டணங்களில் வரவிருக்கும் மாற்றங்கள்..!! விபரங்கள் இதோ..!!

Published: 4 Mar 2025, 1:52 PM |
Updated: 4 Mar 2025, 2:52 PM |
Posted By: Menaka

துபாயில் வரவிருக்கும் ஏப்ரல் மாதம் முதல், பார்க்கிங் கட்டணம் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்படும் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாறுபட்ட கட்டணங்கள் குடியிருப்பாளர்களின் அன்றாட பயணத்தை பாதிக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு விரைவில் அமலுக்கு வரவிருக்கும் பார்க்கிங் கட்டண புதுப்பிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய பார்க்கிங் கட்டணம்:

ஏப்ரல் முதல், துபாய் முழுவதும் மாறுபட்ட பார்க்கிங் விலை அறிமுகப்படுத்தப்படும் என்பதை பார்கின் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதில் முக்கிய மாற்றமாக அனைத்து பொது மண்டலங்களிலும் உள்ள பிரீமியம் பார்க்கிங் இடங்கள் நேர அடிப்படையிலான கட்டணத்தைக் கொண்டிருக்கும்.

குறிப்பாக, போக்குவரத்து அதிகமுள்ள காலங்களில் ஒரு மணி நேரத்திற்கு 6 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். இதனடிப்படையில் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பிரீமியம் பார்க்கிங் ஒரு மணி நேரத்திற்கு 6 திர்ஹம்ஸ் ஆக இருக்கும்.

ADVERTISEMENT

சில தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டலங்களில் முழு நாள் பார்க்கிங் கட்டணம்

  • மண்டலம் Bயில்  நாள் முழுவதும் பார்க்கிங் செய்ய 40 திர்ஹம்ஸ்
  • மண்டலம் D முழு நாள் பார்க்கிங்: 30 திர்ஹம்ஸ்

இந்த மாற்றங்கள் பிஸியான காலங்களில் பார்க்கிங் அதிக விலை கொண்டதாக இருக்கும், எனவே அதற்கேற்ப பார்க்கிங் திட்டங்களை சரிசெய்ய வேண்டும்.

அதிக தேவை உள்ள பகுதிகள்:

  • சிறப்பு நிகழ்வுகளின் போது நிகழ்வு நடைபெறும் இடங்களுக்கு (event area) அருகில் உள்ள சில பகுதிகளில் பார்க்கிங் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு 25 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

எனவே துபாயில் உள்ள வாகன ஓட்டிகள் எப்போது, ​​எங்கு நிறுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து பார்க்கிங் கட்டணம்  செலுத்த வேண்டியிருக்கும். பீக் மற்றும் ஆஃப்-பீக் நேரங்களின் அடிப்படையில் மிகவும் மாறுபட்ட பார்க்கிங் கட்டணத்தை எதிர்பார்க்கலாம், அதாவது பிஸியான நேரங்களில் பார்க்கிங் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.

ADVERTISEMENT

இந்த மாற்றங்கள் துபாய் பார்க்கிங் அமைப்பில் முக்கிய ஒரு பகுதியாகும். உதே போன்று போக்குவரத்து தேவையை நிர்வகிக்க சாலிக் நிறுவனத்தால் டைனமிக் டோல் கேட் கட்டணங்களும் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். எனவே துபாய் வாகன ஓட்டிகள் இதற்கேற்றவாறு தங்களின் பயணங்களையும் பார்க்கிங்கையும் திட்டமிட வேண்டியது அவசியமாகின்றது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel