ADVERTISEMENT

UAE: பார்வையற்றோருக்காக பல்வேறு அம்சங்களுடன் முதல் பிரத்யேக கடற்கரையை திறந்த எமிரேட்!!

Published: 20 Apr 2025, 5:28 PM |
Updated: 20 Apr 2025, 5:29 PM |
Posted By: Menaka

பார்வையற்றோர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பிரத்யேக கடற்கரையை அபுதாபி அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இதன் மூலம் அபுதாபி எமிரேட்டானது நகர்ப்புற வடிவமைப்பில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அபுதாபி கார்னிச் பகுதியில் கேட் 3 க்கு அருகில் அமைந்துள்ள இந்த 1,000 சதுர மீட்டர் கடற்கரை பகுதி, சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினருக்கு பாதுகாப்பான, அணுகக்கூடிய மற்றும் வரவேற்கத்தக்க சூழலை வழங்குவதற்காக சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘Zayed Higher Organisation’ ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் கீழ் வந்துள்ள இந்த திட்டம், ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களால் 2025 ஐ ‘சமூகத்தின் ஆண்டு’ என்று அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் வருகிறது.

கடற்கரையின் சிறப்பம்சங்கள்

பாதுகாப்பானதாகவும் வரவேற்கத்தக்கதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கடற்கரை, பல்வேறு அணுகல் கருவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது பார்வைக் குறைபாடுள்ள நபர்கள் தனியாக நீந்தவும் பாதுகாப்பான, மரியாதைக்குரிய சூழலில் தங்கள் நேரத்தை அனுபவிக்கவும் அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

இந்த கடற்கரை தினசரி காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும் மற்றும் சூரியன் மறையும் வரை நீச்சல் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமம் பெற்ற செவிலியரால் கடற்கரை இயக்க நேரம் முழுவதும் முதலுதவி சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அரங்கில் அங்கீகரிக்கப்பட்டது

அபுதாபியின் வடிவமைப்பை மேலும் சிறப்பிக்கும் வகையில், இந்த கடற்கரை உலக மாற்றுத்திறனாளிகள் சங்கத்திடமிருந்து (World Disability Union) சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது, மேலும் உலகளாவிய உயர் தரநிலைகளைப் பூர்த்தி செய்ததற்காக “Disability-Friendly Beach”  விருதைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்கள்

  • மாற்றுத்திறனாளிகளின் எளிதான போக்குவரத்து வசதிக்காக பிரத்யேக வாகன சேவை
  • பார்வை குறைபாடுள்ளவர்களுக்காக சிறப்பாக நடைபாதை அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் பாதைகள்
  • நீச்சல் வழிமுறைகளை விவரிக்கும் பிரெய்லி அடையாள பலகைகள் (Braille signage board)
  • வழிகாட்டும் கயிறுகள் மற்றும் நீர்வழிப்பாதைக்கு கேட்கக்கூடிய எச்சரிக்கை மணிகள் கொண்ட வேலி அமைக்கப்பட்ட நடைபாதை
  • உயிர்காப்பாளர்களுடன் கூடிய மேற்பார்வையிடப்பட்ட நீச்சல் பகுதி
  • அனைத்து வயதினரையும் சேர்ந்த பார்வை குறைபாடுள்லவர்களுக்கு பிரெய்லி அச்சிடப்பட்ட சேவை வழிகாட்டி (Braille-printed service guide)

மாற்றுதிறனாளிகளுக்கான கூடுதல் சேவைகள்

  • மாற்றுத்திறனாளிகளுக்கும் உடன் வரும் ஒருவருக்கும் இலவச கடற்கரை அணுகல்
  • முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அணுகக்கூடிய பாதைகள்
  • பிரத்யேக கழிப்பறைகள்
  • நீர் அணுகலுக்கான மிதக்கும் நாற்காலிகள்
  • இலவச குடிநீர் நிலையங்கள்
  • இலவச போக்குவரத்து சேவைகள்
  • கடற்கரைக்கு அருகில் ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்கள்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel