ADVERTISEMENT

திறமையான தொழிலாளர்களை ஈர்க்கும் அபுதாபி: 2.5 மில்லியனை எட்டிய தொழிலாளர்களின் எண்ணிக்கை.. புள்ளிவிபரங்கள் வெளியீடு…

Published: 14 Apr 2025, 6:33 PM |
Updated: 14 Apr 2025, 6:36 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி திறமையான நிபுணர்களுக்கான உலகளாவிய மையமாக வேகமாக மாறி வருகிறது. குறிப்பாக, 2011 மற்றும் 2023 க்கு இடைப்பட்ட காலத்தில், அபுதாபியின் பணியாளர்கள் 82% அதிகரித்து, 2.5 மில்லியனை அடைந்ததாக அபுதாபியின் புள்ளிவிவர மையம் வெளியிட்ட புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இதில் நிதி, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பிற சிறப்புத் துறைகளில் உள்ள நிபுணர்கள் மொத்த பணியாளர்களில் 46% ஆக உள்ளதாகவும், இது 13 ஆண்டு காலத்தில் 109% அதிகரிப்பைக் குறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 54% திறமையான ப்ளூ காலர் தொழிலாளர்கள் என்றும், அவர்களின் எண்ணிக்கை 65% அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதராம்

இந்த புள்ளிவிவரங்களை அபுதாபி ஊடக அலுவலகம் அதன் ‘Abu Dhabi in Numbers’  தொடரின் ஒரு பகுதியாக X தளத்தில் பகிர்ந்து கொண்டது. இந்தத் தரவானது தொழில்நுட்பம், சுற்றுலா, சுகாதாரம் மற்றும் நிதி போன்ற முக்கிய துறைகளில் நீண்டகால முதலீடுகளால், ஒரு பாரம்பரிய, எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து பன்முகத்தன்மை கொண்ட, அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு அபுதாபியின் ஒரு வெற்றிகரமான மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வளர்ச்சி

  • மக்கள்தொகை வளர்ச்சி: 2011 முதல் 2023 வரை அபுதாபியின் மக்கள் தொகை 83% அதிகரித்துள்ளது.
  • எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தி: 59% அதிகரித்துள்ளது, இது எண்ணெய் சாரா தொழிலில் வலுவான செயல்திறனைக் காட்டுகிறது.
  • வெளிநாட்டு முதலீடு உயர்ந்து, 300 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

புதுமை மற்றும் வணிகத்திற்கான மையமாக அபுதாபி தொடர்ந்து விரிவடைந்து வருவதால், திறமையான தொழிலாளர்களை ஈர்ப்பது நீண்டகால பொருளாதார வளர்ச்சியை இயக்குவதற்கான முக்கிய மையமாக அபுதாபி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT