ADVERTISEMENT

10 வருடங்களுக்கு பின் ஜபீல் பார்க்கில் மூடப்படும் ‘Dubai Garden Glow’.. நிர்வாகம் அறிவிப்பு..!!

Published: 29 Apr 2025, 9:04 AM |
Updated: 29 Apr 2025, 9:08 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பிரபலமான குடும்ப பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான துபாய் கார்டன் க்ளோ (Dubai Garden Glow), அதன் 10வது சீசனை வெற்றிகரமாக முடித்ததையடுத்து, அதன் நீண்டகால இடமான ஜபீல் பார்க்கில் (Zabeel park) தனது அதிகாரப்பூர்வமாக மூடலை அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ மறு திறப்பு தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், துபாய் கார்டன் க்ளோ நிர்வாகம் ஒரு புதிய அம்சத்துடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்படும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக துபாய் கார்டன் க்ளோவின் அதிகாரப்பூர்வ X கணக்கு மற்றும் வலைத்தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அதன் தற்போதைய சீசன் முடிவடைவதை உறுதிப்படுத்தியதுடன் விரைவில் புதிய மற்றும் அற்புதமான சிறப்பம்சங்களை உறுதியளிக்கும் வகையில், கார்டன் க்ளோ விரைவில் ஒரு புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

துபாய் கார்டன் க்ளோ, முதன்முதலாக ஜபீல் பார்க்கில் 2015 இல் திறக்கப்பட்டதிலிருந்து, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இருவருக்கும் ஒரு முக்கிய ஈர்ப்பாக இருந்து வருகிறது. அதன் ஒளிரும் சிற்பங்கள், அனிமேட்ரோனிக் டைனோசர்கள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் கருப்பொருள் நிறுவல்களுக்கு இது பெயர் பெற்றதாகும். காலப்போக்கில், இது உலகின் மிகப்பெரிய இருளில் ஒளிரும் தோட்டம், கலை, நிலைத்தன்மை மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றைக் கொண்டிருப்பதற்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது தொடர்பாக வெளியான தகவல்களில் மத்திய கிழக்கின் முதல் ஒருங்கிணைந்த நல்வாழ்வு ரிசார்ட் மற்றும் பூங்காவான ‘Therme Dubai’ஐ அமைக்கும் வகையில் மாற்றப்படும் ஜபீல் பார்க்கிங் பரந்த மறுவடிவமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த மூடல் வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Therme Group’ உடன் இணைந்து உருவாக்கப்படும் இந்த திட்டம், துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் பிளான் உடன் ஒத்துப்போகிறது மற்றும் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2 பில்லியன் திர்ஹம் மதிப்புடைய இந்த தெர்ம் துபாய் ரிசார்ட், 500,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருக்கும், 100 மீட்டர் உயரம், மேலும் வெப்பக் குளங்கள் (thermal pools), மூன்று நீர்வீழ்ச்சிகள், மிச்செலின் நட்சத்திரமிட்ட உணவகம் (Michelin-starred restauran) மற்றும் உலகின் மிகப்பெரிய உட்புற தாவரவியல் பூங்கா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ரிசார்ட் 2028 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் துபாய் கார்டன் க்ளோ அதன் சின்னமான ஜபீல் பார்க் அமைப்பிலிருந்து விடைபெறும் அதே வேளையில், பார்வையாளர்கள் ஒரு புதிய இடத்தில் புதிதான அனுபவத்தை எதிர்நோக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel