கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி அதிகரித்து வந்த நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஏப்ரல் 28, திங்கள்கிழமை) துபாயில் தங்கத்தின் விலை கிராமுக்கு 400 திர்ஹம்ஸ்க்கும் கீழே சரிந்துள்ளது, உலகளாவிய சந்தைகளில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3,300 டாலருக்கும் கீழே சரிந்ததால் இந்த வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக நேரப்படி காலை 9:00 மணிக்கு, 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு 397.5 திர்ஹம்ஸ்க்கு விற்கத் தொடங்கியது, வார இறுதியில் கிராமுக்கு 400 திர்ஹம்சிற்கு விற்கப்பட்ட தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 7 நாட்களில் விற்கப்பட்ட தங்கத்தின் விலையை விட இன்று விலை குறைந்துள்ளதால் தங்கம் வாங்கவிருக்கும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பின்வரும் மற்ற தங்க வகைகளின் விலையும் சரிவடைந்துள்ளன:
- 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 368.25 திர்ஹம்ஸ்
- 21 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 353.0 திர்ஹம்ஸ்
- 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 302.5 திர்ஹம்ஸ்
உலகளவில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 3,300.33 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இப்போது 0.97% சரிந்து, ஆரம்ப வர்த்தகத்தில் 3,290 டாலருக்கு கீழே சரிந்துள்ளது. அமெரிக்க-சீனா வர்த்தக பதட்டங்கள் மற்றும் உலகளாவிய நிதித் தடைகளில் அமெரிக்க டாலரின் பயன்பாடு அதிகரித்தல் உள்ளிட்ட காரணிகளால் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று சற்றே சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel