ADVERTISEMENT

துபாயின் குறிப்பிட்ட பகுதிகளில் அமலுக்கு வரும் புதிய பார்க்கிங் கட்டணங்கள்!! விபரங்கள் வெளியீடு..!!

Published: 23 Apr 2025, 2:24 PM |
Updated: 23 Apr 2025, 2:24 PM |
Posted By: Menaka

துபாயின் மிகப்பெரிய பொது பார்க்கிங் ஆபரேட்டரான பார்கின், அல் கிஃபாஃப், அல் கராமா, அல் குசைஸ் ஃபர்ஸ்ட், மதீனத் துபாய் மற்றும் அல் மெலாஹேயா உள்ளிட்ட நகரத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு புதிய பார்க்கிங் கட்டணங்களை அறிவித்துள்ளது. மேலும் பார்க்கின் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் வழியாக திருத்தப்பட்ட பாரக்கிங் கட்டணங்களின் விபரங்களையும் நேற்று செவ்வாய்கிழமை பகிர்ந்துள்ளது.

ADVERTISEMENT

துபாய் நெரிசலைக் குறைப்பதற்கும் பார்க்கிங் தேவையை மிகவும் திறமையாக நிர்வகிப்பதற்கும் ஏப்ரல் 4 முதல் மாறுபட்ட கட்டண பார்க்கிங் முறையை பார்க்கின் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதனால் பார்க்கிங் செலவானது, நாளின் நேரம் மற்றும் அந்தப் பகுதி பிரீமியம் அல்லது நிலையான மண்டலமாக நியமிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது.

நிலையான மண்டல விகிதங்கள்:

அல் கராமா (318W), அல் குசைஸ் ஃபர்ஸ்ட் (32W), மதீனத் துபாய் மற்றும் அல் மெலாஹேயா (321W) ஆகிய பகுதிகளில் பீக்-ஹவர் (நெரிசலான நேரம்) வேறுபாடு இல்லாமல், நாள் முழுவதும் மணிக்கு 4 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ADVERTISEMENT

அதுவே அல் கிஃபாஃபின் WP – பிரீமியம் மண்டலத்தில் காலை 8–10 மணி மற்றும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலான நெரிசலான நேரங்களின் போது மணிக்கு 6 திர்ஹம்ஸ் ஆகவும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலான நெரிசல் அல்லாத நேரங்களின் போது மணிக்கு 4 திர்ஹம்ஸ் ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘WP’ குறியீடானது அப்பகுதியை பிரீமியம் பார்க்கிங் மண்டலமாக குறிக்கும். இது பொதுவாக அதிக தேவை உள்ள, பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் உள்ள மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் காணப்படுகிறது. பிரீமியம் இடங்கள் விரிவான கட்டணத் தகவல்களுடன் ‘345CP’ போன்ற பலகைகள் மற்றும் மண்டல குறியீடுகளுடன் தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT

நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்

  • கட்டண வாகன நிறுத்துமிட நேரம்: காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஆகும். இந்த நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் பார்க்கிங் கட்டணம் இலவசமாகும்.
  • இலவச வாகன நிறுத்துமிட நேரம்: வார விடுமுறை நாளான ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் துபாயில் நாள் முழுவதும் பார்க்கிங் கட்டணம் இலவசமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel