துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சமீபத்தில் நடைபெற்ற பிரத்யேக வாகன நம்பர் பிளேட்டுக்கான 118வது திறந்த ஏலத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன் திர்ஹம்ஸ் வருவாயை ஈட்டி ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. RTA வெளியிட்ட விபரங்களின் படி, அதிகபட்ச ஏலம் நம்பர் பிளாட் CC 22 என்ற எண்ணுக்கு சென்றது என்றும், இது 8.35 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு விற்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, BB 20 என்ற எண் 7.52 மில்லியன் திர்ஹம்ஸ்க்கும், BB 19 என்ற எண் 6.68 மில்லியன் திர்ஹம்ஸ்க்கும், AA 707 என்ற எண் 3.31 மில்லியன் திர்ஹம்ஸ் மற்றும் AA 222 என்ற எண் 3.3 மில்லியன் திர்ஹம்ஸ்க்கும் விற்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், 90 பிரத்யேக எண்கள் ஏலம் விடப்பட்டதாகவும், இதில் AA, BB, CC, I, J, O, P, T, U, V, W, X, Y, மற்றும் Z போன்ற குறியீடுகளிலிருந்து இரண்டு முதல் ஐந்து இலக்க எண்கள் இடம்பெற்றதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. நம்பர் பிளேட்களின் அடிப்படை மதிப்பு 16.565 மில்லியன் திர்ஹம்ஸாக இருந்தாலும், ஏலம் இறுதித் தொகையை 98.83 மில்லியன் திர்ஹம்ஸாக உயர்த்தியதன் மூலம் RTA வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ஏலமாக இது அமைந்ததாகக் கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel