துபாயின் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், நகரத்தின் மிகவும் பிரபலமான வெளிப்புற சுற்றுலா தலங்கள் சில அவற்றின் பருவகால மூடலுக்கு தயாராகி வருகின்றன. நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், கோடை மாதங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு முன்பு இந்த சின்னச் சின்ன இடங்களை ரசிக்க இதுவே சரியான நேரம்.
ஆம், துபாயின் பிரமிக்க வைக்கும் துபாய் ஃபவுன்டைன் முதல் மிராக்கிள் கார்டன் வரை, கோடை வெப்பம் தாக்குவதற்கு முன்பு துபாயின் திறந்தவெளி சுற்றுலா தலங்கள் இன்னும் சில நாட்களில் மூடப்படவுள்ளது. அவ்வாறு வரும் நாட்களில் என்னவெல்லாம் மூடப்படும்? எப்போது மூடப்படும் என்பது பற்றிய விபரங்களை கீழே பார்க்கலாம்.
1. துபாய் ஃபவுன்டைன்
துபாய் மாலில் அமைந்துள்ள துபாய் ஃபவுன்டைன், கோடை விடுமுறைக்கு என்றில்லாமல் புதுப்பித்தல் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படவுள்ளது. இதன் இறுதி நிகழ்ச்சி ஏப்ரல் 19, 2025 அன்று நடைபெறும், அதன் பிறகு மே மாதத்தில் விரிவான மேம்பாட்டுப் பணிகள் தொடங்கும் என்று மாஸ்டர் டெவலப்பர் Emaar தெரிவித்துள்ளது.
Emaar-ன் கூற்றுப்படி, மேம்பட்ட தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட நடன அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒலி மற்றும் விளக்கு அமைப்புகளை அறிமுகப்படுத்துவதே இந்த புதுப்பித்தலின் நோக்கமாகும். இந்த ஃபவுண்டைன் 2025 அக்டோபரில் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. குளோபல் வில்லேஜ்
குளோபல் வில்லேஜின் 29வது சீசன் அதிகாரப்பூர்வமாக மே 11, 2025 அன்று முடிவடையும். 90க்கும் மேற்பட்ட கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் இந்த பிரபலமான இடம், அக்டோபர் 2024 இல் தொடங்கிய அதன் புதிய சீசனுக்குப் பிறகு மே மாதத்தில் மூடப்படவுள்ளது.
நேரம்:
- ஞாயிறு – புதன்: மாலை 4 மணி – நள்ளிரவு 12 மணி
- வியாழன் – சனி: மாலை 4 மணி – அதிகாலை 1 மணி
- செவ்வாய் கிழமைகள் (பொது விடுமுறை நாட்கள் தவிர) குடும்பங்கள், தம்பதிகள் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விலைகள்:
- வீக் டே டிக்கெட்: ஒருவருக்கு 25 திர்ஹம்ஸ்
- எனி டே டிக்கெட்: ஒருவருக்கு 30 திர்ஹம்ஸ்
மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச நுழைவு.
3. துபாய் மிராக்கிள் கார்டன்
அக்டோபர் 2024 இல் அதன் 13வது சீசனைத் தொடங்கிய துபாய் மிராக்கிள் கார்டன், பொதுவாக அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக ஜூன் மாதத்தில் மூடப்படும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் அதிகாரப்பூர்வ மூடல் தேதியை அறிவிக்கவில்லை. உலகின் மிகப்பெரிய இயற்கை மலர் தோட்டம் 150 மில்லியனுக்கும் அதிகமான பூக்களைக் கொண்டுள்ளது மற்றும் பல கின்னஸ் உலக சாதனைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திறந்திருக்கும் நேரம்:
- வார நாட்கள்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
- வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள்: காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை
டிக்கெட் விலைகள்:
எமிரேட்ஸ் ஐடியுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் டிக்கெட் கவுண்டரில் வாங்கும் போது 40 சதவீத தள்ளுபடி பெறலாம்.
- பெரியவர்கள்: 100 திர்ஹம்ஸ்
- குழந்தைகள் (3-12 வயது): 85 திர்ஹம்ஸ்
- மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள்: இலவசம்
- மாற்றுத்திறனாளிகள்: 40 திர்ஹம்ஸ்
4. துபாய் கார்டன் க்ளோ
உலகின் மிகப்பெரிய இருளில் ஒளிரும் பூங்காக்களில் ஒன்றான துபாய் கார்டன் க்ளோ, கோடை மாதங்களுக்கு மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ மூடல் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த பூங்காவில் பிரமிக்க வைக்கும் வடிவில் விளக்குகள் ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும். அவை தனித்துவமான இரவு நேர அனுபவத்தை வழங்குகின்றன.
திறக்கும் நேரம்:
- ஞாயிறு – வெள்ளி: மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை
- சனி மற்றும் பொது விடுமுறை நாட்கள்: மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை.
டிக்கெட் விலைகள்
துபாய் கார்டன் க்ளோ மற்றும் டைனோசர் பார்க் ஒரு நபருக்கு 75 திர்ஹம்ஸ் (VAT உட்பட).
5. துபாய் சஃபாரி பார்க்
அதிகாரப்பூர்வ மூடல் தேதி உறுதி செய்யப்படவில்லை என்றாலும், துபாய் சஃபாரி பூங்காவிற்கான முன்பதிவுகள் ஜூன் 1, 2025 வரை மட்டுமே கிடைக்கின்றன. சுமார் 119 ஹெக்டேர் பரப்பளவில் கிட்டத்தட்ட 3,000 விலங்குகளைக் கொண்ட இந்த சுற்றுச்சூழல் நட்பு பூங்கா, கோடை காலம் ஆரம்பிக்கும் வரை செயல்பாட்டில் இருக்கும். குழந்தைகள் பண்ணை மற்றும் பல்வேறு வனவிலங்கு மண்டலங்கள் உட்பட வனவிலங்குகள் மற்றும் பிரத்யேக அனுபவங்களை குடும்பங்கள் அனுபவிக்க இது ஒரு சிறந்த இடமாகும்.
திறந்திருக்கும் நேரம்
- தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை (கடைசி நுழைவு மாலை 5 மணி)
டிக்கெட் விலைகள்:
சஃபாரி பார்க் பாஸ் (நடைப்பயண சுற்றுப்பயணங்கள், நேரடி நிகழ்ச்சிகள், குழந்தைகள் பண்ணை மற்றும் 15 நிமிட அரேபிய பாலைவன மண்டல ஷட்டில் சுற்றுப்பயணம் ஆகியவை அடங்கும்)
- பெரியவர்கள்: 50 திர்ஹம்ஸ்
- குழந்தைகள் (3-12 வயது): 20 திர்ஹம்ஸ்
மேற்கூறிய இந்த சுற்றுலா தலங்கள் கோடை காலத்தில் மூடப்படுவதற்கு முன்பு சுற்றுலா செல்பவர்கள் இந்த இடங்களுக்கு சென்று சிறந்த அனுபவங்களை பெறலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel