ADVERTISEMENT

துபாய்: ஈத் விடுமுறையில் மட்டும் 6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள்.. RTA வெளியிட்ட புள்ளிவிபரம்..!!

Published: 3 Apr 2025, 6:26 PM |
Updated: 3 Apr 2025, 6:30 PM |
Posted By: Menaka

அமீரகம் முழுவதும் ஈத் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், ​​துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரையிலான ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் போது மொத்தம் 6.39 மில்லியன் பயணிகள் அதன் பல்வேறு பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கையை கூறி, புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

பயணிகளின் புள்ளிவிவரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • துபாய் மெட்ரோ: ரெட் மற்றும் க்ரீன் வழித்தடங்களில் 2.428 மில்லியன் பயணிகள்
  • துபாய் டிராம்: 111,130 பயணிகள்
  • பொது பேருந்துகள்: 1.330 மில்லியன் பயணிகள்
  • கடல் போக்குவரத்து: 408,991 பேர்
  • டாக்ஸிகள்: துபாய் டாக்ஸி மற்றும் உரிமையாளர்கள் உட்பட டாக்ஸிகள் 1.687 மில்லியன் பயனர்களுக்கு சேவை செய்தன.
  • பகிரப்பட்ட மொபிலிட்டி சேவைகள் (shared mobility services): இ-ஹெயில் வாகனங்கள், மணிநேர கார் வாடகைகள் மற்றும் ஆன்-டிமான்ட் பஸ் உட்பட 429,616 பயணிகள்

கூடுதலாக, RTA ஆனது, 2026 ஆம் ஆண்டுக்குள் செல்ஃப்-டிரைவிங் டாக்சிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்களுடன், தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்ப வழங்குநர்களுடன் அதன் கூட்டாண்மைகளை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel