ADVERTISEMENT

துபாயில் அதிகரித்த பார்க்கிங் கட்டணம்.. மாற்று வழியை தேடும் வாகன ஓட்டிகள்.!!

Published: 8 Apr 2025, 5:39 PM |
Updated: 8 Apr 2025, 6:26 PM |
Posted By: Menaka

துபாயில் சமீபத்தில் மாறுபட்ட பார்க்கிங் கட்டணங்கள் இந்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டதால், போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு அதிக செலவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக துபாயில் பிரீமியம் பார்க்கிங் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பரபரப்பான நேரங்களில் பார்க்கிங் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

இந்த கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, சில குடியிருப்பு கட்டிடங்கள் வாகன ஓட்டிகளுக்கு ஒரு சாத்தியமான பார்க்கிங் விருப்பமாக மாறி வருகின்றன. கட்டண உயர்வுக்கு முன்பே ஏற்கனவே பார்க்கிங் இடங்களை வழங்கும் அல் பர்ஷா, கராமா மற்றும் தேரா போன்ற பகுதிகள், ஒரு மணி நேரத்திற்கு 5 திர்ஹம் வரை குறைந்த கட்டணங்களுடன் குடியிருப்பாளர்களுக்கு மலிவு விலை விருப்பங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன என்பது குறிப்ப்பிடத்தக்கது.

மறுபுறம், பொது இடங்களில், குறிப்பாக பிரீமியம் மண்டலங்களில், நெரிசல் நேரங்களில் பார்க்கிங் கட்டணம் மண்டலத்தைப் பொறுத்து 2 அல்லது 4 திர்ஹம்களில் இருந்து 6 திர்ஹம் ஆக அதிகரித்துள்ளது. நெரிசல் இல்லாத நேரங்களில் பார்க்கிங் மாறாமல் இருந்தாலும், புதிய மாறுபட்ட பார்க்கிங் விலை நிர்ணயம் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது, இதனால் பலர் மாற்று வழிகளைத் தேடுகின்றனர்.

ADVERTISEMENT

பெரும்பாலான குடியிருப்பு கட்டிடங்கள் ஒரு யூனிட்டுக்கு குறைந்தது ஒரு இலவச பார்க்கிங் இடத்தை வழங்குவதுடன் மாதாந்திர பார்க்கிங் சந்தாக்களை வழங்கத் தொடங்கியுள்ளன, விலைகள் மாதத்திற்கு திர்ஹம் 200 முதல் திர்ஹம் 250 வரை இருக்கும் என்று குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது பொது பார்க்கிங்குடன் ஒப்பிடும்போது மிகவும் சிக்கனமான விருப்பத்தை வழங்குகிறது. இருப்பினும், பார்க்கிங் இடங்கள் குறைவாகவே உள்ளது, மேலும் சில குடியிருப்பாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட இடங்கள் இல்லாதது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையில், பார்க்கிங் செலவுகளைக் குறைக்க, சில குடியிருப்பாளர்கள் சீசன் பார்க்கிங் பாஸைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறப்படுகின்றது, இது நகரத்தின் பல மண்டலங்களில் நிலையான கட்டணத்தில் பார்க்கிங் செய்ய அனுமதிக்கிறது, இதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். சமீபத்திய கட்டண மாற்றங்களால் இந்த பாஸில் மாற்றம் ஏற்படவில்லை மற்றும் அடிக்கடி பார்க்கிங் செய்பவர்களுக்கு இது மிகவும் செலவு குறைந்த விருப்பமாகக் கருதப்படுகிறது.

பார்கின் மற்றும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் வலைத்தளங்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களில் இந்த சீசன் பாஸ் கிடைக்கிறது. பொது பார்க்கிங் கட்டணங்கள் அதிகரிப்பதால் குடியிருப்பு பார்க்கிங்கிற்கான தேவை அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. இது தினசரி பயணிகளுக்கு இந்த மாற்று பார்க்கிங் விருப்பங்களை இன்னும் முக்கியமானதாக ஆக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel