ADVERTISEMENT

ஒரு வருடத்தில் 50 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்ற எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய்..!! விமான நிறுவனம் அறிக்கை..!!

Published: 29 Apr 2025, 8:47 PM |
Updated: 29 Apr 2025, 8:50 PM |
Posted By: Menaka

கடந்த ஆண்டான 2024இல், துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் இடையேயான கூட்டாண்மையின் மூலம் சுமார் 5 மில்லியன் பயணிகள் கையாளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 36% அதிகம் எனவும், துபாய் வழியாக இணைப்பு மற்றும் பயண வசதியை மேம்படுத்துவதற்கான விமான நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளின் வெற்றியை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்ட இரண்டு விமான நிறுவங்களுக்கு இடையேயான இந்த கூட்டாண்மை, துபாயை ஒரு சிறந்த உலகளாவிய பொருளாதார மற்றும் சுற்றுலா மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட துபாயின் D33 விஷன் திட்டத்தை ஆதரிப்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகின்றது. சுமார் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் 240 இடங்களுக்கு இரு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதன் மூலம், இந்த கூட்டணி துபாயை உலகின் மிகவும் இணைக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக நிலைநிறுத்த உதவுகிறது.

இது குறித்து எமிரேட்ஸ் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியும் ஃப்ளைதுபாயின் தலைவருமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம், இந்த கூட்டாண்மையை “கேம்சேஞ்சர்” என்று குறிப்பிட்டதுடன், “இது பயணிகளுக்கு கூடுதல் விருப்பங்களையும் சிறந்த அனுபவத்தையும் வழங்கும் கூட்டு முயற்சியின் சிறப்பிற்கு ஒரு சான்றாகும்,” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

2017 இல் கூட்டாண்மை தொடங்கப்பட்டதிலிருந்து, ஏழு ஆண்டுகளாக 22 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இந்த கூட்டு சேவைகளால் பயனடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. வெறும் 29 நகரங்களுடன் தொடங்கிய இந்த நெட்வொர்க் இப்போது கணிசமாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டாண்மையின் மூலம் எமிரேட்ஸ் வாடிக்கையாளர்கள் இப்போது 132 க்கும் மேற்பட்ட ஃப்ளைதுபாய் செல்லும் இடங்களை அணுக முடியும், அதே நேரத்தில் ஃப்ளைதுபாய் பயணிகள் 142 க்கும் மேற்பட்ட எமிரேட்ஸ் பயணிக்கும் இடங்களை அணுக முடியும். இவை அனைத்தும் தடையற்ற இணைப்புகள், ஒருங்கிணைந்த செக்-இன் மற்றும் லக்கேஜ்களை கையாளுதல் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 க்கான அணுகல் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel