அபுதாபியில் இயங்கி வரும் மால்களில் முக்கிய மால்களில் ஒன்றான அல் வஹ்தா மாலில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தை அறிந்ததும் அபுதாபி காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.
அதிகாரிகளின் விரைவான செயலால், தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குளிரூட்டும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மாலில் ஏற்பட்ட தீ விபத்தினால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நாளில், துபாய் ஹார்பர் பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் ஒரு yacht முழுவதுமாக தீயில் எரிந்துள்ளது. துபாய் சிவில் பாதுகாப்பு குழு இது குறித்து தெரிவிக்கையில் காலை 8:24 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், தீயணைப்பு வீரர்கள் நான்கு நிமிடங்களுக்குள் வந்ததாகவும் தெரிவித்துள்ளது.
துபாய் துறைமுக தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியை காலி செய்து இரண்டு மணி நேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, குளிரூட்டும் செயல்முறை காலை 10:13 மணிக்கு தொடங்கியது. அபுதாபி சம்பவத்தைப் போலவே, யாருக்கும் இதில் காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel