ADVERTISEMENT

ஓமானில் கேஸ் வெடித்து பயங்கர விபத்து: இடிபாடுகளுக்கு அடியில் தேடுதல் பணிகள் தீவிரம்!!

Published: 3 Apr 2025, 4:25 PM |
Updated: 3 Apr 2025, 4:29 PM |
Posted By: Menaka

ஓமானின் குரையாத் (Qurayyat) பகுதியில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் இன்று ஏப்ரல் 3, 2025 அன்று கேஸ் வெடிப்பு ஏற்பட்டதாக செய்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த பயங்கர விபத்தானது வணிக கட்டிடம் மட்டுமல்லாமல் அதன் அருகிலிருந்த கட்டிடத்தையும் பாதித்ததாக காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மஸ்கட்டில் உள்ள சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் துறையின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்தி வருகின்றன. இந்த எரிவாயு வெடிப்பின் விளைவாக அப்பகுதியில் இருந்தவர்களுக்கு லேசானது முதல் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், எரிவாயு விபத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நிலையில், காணாமல் போன அந்த நபரைக் கண்டுபிடிக்க தேடுதல் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் ஓமான் ராயல் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

குரையாத்தில் ஏற்பட்ட இந்த கேஸ் வெடிப்பு, மக்கள் தொகை அடர்த்தியான வணிகப் பகுதிகளில் ஏற்படக்கூடிய தொடர்ச்சியான அபாயங்களை எடுத்துக்காட்டுவதாக அப்பகுதியில் வசிக்கும் பலரும் தெரிவித்துள்ளனர்.

எதிர்பாராத விபத்து நடந்த இந்த இடத்தில் தற்போது மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மஸ்கட்டில் உள்ள அவசரகாலக் குழுக்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

ADVERTISEMENT

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel