ADVERTISEMENT

பெயர் மாற்றம் செய்யப்படவிருக்கும் மற்றொரு துபாய் மெட்ரோ நிலையம்.. ஏப்ரல் 14 முதல் அமல்..!!

Published: 12 Apr 2025, 2:47 PM |
Updated: 12 Apr 2025, 2:52 PM |
Posted By: Menaka

துபாய் பொதுப் போக்குவரத்தின் முதுகெலும்பாகத் திகழும் துபாய் மெட்ரோவின் ரெட் லைனில் அமைந்துள்ள GGICO மெட்ரோ நிலையம், வரும் (திங்கள்கிழமை, ஏப்ரல் 14, 2024) முதல் அதிகாரப்பூர்வமாக அல் கர்ஹூத் மெட்ரோ நிலையம் (Al Garhoud Metro Station) என மறுபெயரிடப்படும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நேற்று, வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11 அன்று X தளம் வழியாக, நிலையத்தின் இருப்பிடம் மற்றும் புதிய பெயரைக் காட்டும் வரைபடத்துடன் RTA இந்தப் புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டது. இது தொடர்பாக RTA வெளியிட்ட அறிவிப்பின்படி, மெட்ரோ நிலையத்திற்கு மறுபெயரிடும் செயல்முறை வருகின்ற ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரை நடைபெறும், இதன் போது நிலைய அடையாளங்கள், டிஜிட்டல் அமைப்புகள், பொது போக்குவரத்து செயலிகள் மற்றும் உள் அறிவிப்புகள் போன்றவை புதிய பெயருடன்  புதுப்பிக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

அதனடிப்படையில் RTA இந்த மெட்ரோ நிலையத்திற்கு புதிய பெயரை அறிவித்துள்ளது. இதே போல கடந்த மாதம் தான், அல் கைல் மெட்ரோ நிலையம் அல் ஃபர்தான் எக்ஸ்சேஞ்ச் என மறுபெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT