ADVERTISEMENT

UAE: பிக் டிக்கெட் டிராவில் 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வென்ற இந்தியர்…

Published: 4 Apr 2025, 5:23 PM |
Updated: 4 Apr 2025, 5:23 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பிரபலமான பிக் டிக்கெட் டிரா அதன் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு நம்பமுடியாத பரிசுகளை வழங்குவதன் மூலம், வாழ்க்கையை மாற்றும் தருணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்ற பிக் டிக்கெட் டிராவில் ஓமானில் வசிக்கும் இந்தியரான ராஜேஷ் முல்லங்கில் வெள்ளிலபுல்லிதொடி (Rajesh Mullankil Vellilapullithodi), 15 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

மார்ச் 30 ஆம் தேதி அவர் வாங்கிய 375678 என்ற டிக்கெட் எண்ணுடன் இந்த ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும், பின்னர் அவர் பதிலளித்து தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். 33 ஆண்டுகளாக ஓமானில் வசித்து வரும் 45 வயதான தொழில்நுட்ப வல்லுநரான ராஜேஷ் பல ஆண்டுகளாக முயற்சித்த பிறகு இறுதியாக வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிராண்ட் பரிசு வென்றதைத் தொடர்ந்து,  “எனது உணர்ச்சிகளை வார்த்தைகளில் கூட வெளிப்படுத்த முடியவில்லை” என்று  கேரளாவைச் சேர்ந்த வெற்றியாளர் தனது அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இவற்றைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்திற்கு,  25 மில்லியன் திர்ஹம் உத்தரவாதமான கிராண்ட் பரிசை வழங்குவதாக பிக் டிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது, மேலும் இந்த மாதம் ரொக்கப் பரிசு டிக்கெட்டுகளை வாங்கும் எவரும் வாராந்திர இ-டிராவில் நுழைந்து 150,000 திர்ஹம் வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, பிக் டிக்கெட் பிக் வின் போட்டியை (Big Win Contest) அறிமுகப்படுத்துகிறது, இதில் நான்கு அதிர்ஷ்டசாலி டிக்கெட் வைத்திருப்பவர்கள் 20,000 திர்ஹம் முதல் 150,000 திர்ஹம் வரையிலான ரொக்கப் பரிசுகளை வெல்வார்கள் மற்றும் மே 3 அன்று நேரடி டிராவில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு தகுதி பெற, தனிநபர்கள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 24 வரை ஒரே பரிவர்த்தனையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களின் இறுதிப் பட்டியல் மே 1 அன்று பிக் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவை தவிர, மே 3 அன்று ஒரு ரேஞ்ச் ரோவர் வேலார் மற்றும் ஜூன் 3 அன்று ஒரு BMW M440i இரண்டு சொகுசு கார்கள் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel