ADVERTISEMENT

துபாய்: புதிதாக 100 கடைகள், தியேட்டர் என 5 பில்லியன் திர்ஹம்ஸில் விரிவாக்கப்படும் எமிரேட்ஸ் மால்.. பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கும் என தகவல்..!!

Published: 16 Apr 2025, 6:40 PM |
Updated: 16 Apr 2025, 6:40 PM |
Posted By: Menaka

துபாயின் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற ஷாப்பிங் இடங்களில் எமிரேட்ஸ் மால் ஒன்றாகும். 2005 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மால் ஷேக் சையத் சாலையில் அமைந்துள்ளது. இந்த மாலின் டெவலப்பர் மற்றும் ஆபரேட்டரான மஜித் அல் ஃபுத்தைம் (MAF), நடப்பு ஆண்டில், ​​மாலின் 20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 5 பில்லியன் திர்ஹம்ஸ் செலவில் பெரிய விரிவாக்கத் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதுவரை 1.1 பில்லியன் திர்ஹம் செலவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 20,000 சதுர மீட்டர் புதிய இடத்தைச் சேர்க்க கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாகவும் MAF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங்கிற்கு மட்டுமல்லாமல், முழுமையான பொழுதுபோக்கு மற்றும் வாழ்க்கை முறை அனுபவத்தையும் வழங்குவதற்காக அறியப்படும் இந்த மால், 100க்கும் மேற்பட்ட புதிய விற்பனைக் கடைகள், ஒரு புதிய தியேட்டர், பொழுதுபோக்கு மண்டலங்கள், வெளிப்புற சாப்பாட்டுப் பகுதிகள் என புதிய விரிவாக்கத் திட்டத்துடன், ஒரு பெரிய மாற்றத்திற்கு தயாராக உள்ளது என கூறப்பட்டுள்ளது.

விரிவாக்கத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

ஒரு புதிய உட்புற-வெளிப்புறப் பகுதி பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

ADVERTISEMENT
  • பொழுதுபோக்கு இடங்கள்
  • புத்தம் புதிய வெளிப்புற F&B கோர்ட்யார்ட் (outdoor F&B courtyard) திட்டமிடப்பட்டுள்ளது, இது 2027 தொடக்கத்தில் திறக்கப்படும்.
  • குளிர்கால மாதங்களில், இந்தப் பகுதி பார்வையாளர்கள் ஓய்வெடுக்கவும் ரசிக்கவும் ஒரு பசுமைச் சோலையாக மாறும்.
  • ‘The New Covent Garden’ என்ற புதிய தியேட்டர், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் திறக்கப்பட உள்ளது
  • 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நான்கு புதிய பொழுதுபோக்கு வசதிகள் தொடங்கப்படும்
  • VOX சினிமாஸில் உலகின் மிகவும் மேம்பட்ட IMAX அனுபவம்
  • பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்த இந்த மால் விரைவில் புதிய உயர்நிலை உணவகங்களையும், தனித்துவமான அம்சங்களையும் வெளிப்படுத்தும்.

இந்த மேம்படுத்தல் MAF இன் 2030 ஆம் ஆண்டிற்கான “புதிய சாத்தியக்கூறுகளின் மால் (Mall of Possibilities)” என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும், இது மாலை வெறும் ஷாப்பிங் இடமாக மட்டுமல்லாமல், கலாச்சார ஈடுபாடு, தனித்துவமான அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை முறை கொண்ட இடமாக மாற்றுகிறது. எனவே, எமிரேட்ஸ் மாலில் ஷாப்பிங் செய்பவர்கள் விரைவில் மாற்றங்களைக் காணத் தொடங்குவார்கள் என கூறப்படுகின்றது.

இது குறித்து MAF ப்ராப்பர்டி மேலாண்மையின் தலைமை நிர்வாக அதிகாரி கலீஃபா பின் பிரெய்க் பேசுகையில், “இந்த மாற்றம் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் இணைவதற்கும், ஓய்வெடுப்பதற்கும், உத்வேகம் பெறுவதற்கும் புதிய வழிகளை உருவாக்குவது பற்றியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MAF குழுமம் 19 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டுள்ளது மற்றும் 43,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது 29 ஷாப்பிங் மால்கள், ஏழு ஹோட்டல்களை சொந்தமாகக் கொண்டு இயக்குகிறது, ஆண்டுதோறும் 600 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை வரவேற்கிறது. இந்நிலையில் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வரும் இந்த விரிவாக்கத்தின் மூலம், மால் ஆஃப் தி எமிரேட்ஸ் தன்னை ஒரு உயர்மட்ட உலகளாவிய சில்லறை விற்பனை மற்றும் வாழ்க்கை முறை இடமாக நிலைநிறுத்திக் கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel