ADVERTISEMENT

துபாயில் திறக்கப்படவிருக்கும் ‘பாரத் மார்ட்’: இந்திய தயாரிப்புகளுக்கென பிரத்யேக மால்..!! விபரங்கள் வெளியீடு..!!

Published: 11 Apr 2025, 7:12 PM |
Updated: 11 Apr 2025, 7:12 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘பாரத் மார்ட் (bharat Mart)’ என்ற இந்திய தயாரிப்புகளுக்கான ஒரு பெரிய புதிய வர்த்தக வசதியானது, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் துபாயின் ஜெபல் அலி ஃப்ரீ சோனில் (JAFZA) திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கில் இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ADVERTISEMENT

சுமார் 2.7 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் அமையவிருக்கும் இந்த திட்டம், சில்லறை விற்பனை, ஷோரூம்கள் மற்றும் கிடங்கு போன்றவற்றை உள்ளடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கும் உலகளாவிய சந்தைகளுக்கும், குறிப்பாக மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா இடையே வர்த்தகத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

துபாயில் அமைந்துள்ள சீனப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் ‘டிராகன் மார்ட் (Dragon Mart)’ உடன் ஒப்பிடும்போது, ​​பாரத் மார்ட் ஆனது வணிகத்திலிருந்து வணிகத்திற்கு (Business to Business – B2B) மற்றும் வணிகத்திலிருந்து நுகர்வோர் (Business to Consumer – B2C) சந்தையாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இந்திய நிறுவனங்களுக்கு இந்தப் பகுதியில் வலுவான இருப்பை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாரத் மார்ட் தொடர்பான விபரங்கள்

  • மொத்த பரப்பளவு: 2.7 மில்லியன் சதுர அடி
  • முதல் கட்டம்: 1.3 மில்லியன் சதுர அடி
  • ஷோரூம்கள்: 1,500
  • சேமிப்பு கிடங்கு இடம்: 700,000+ சதுர அடி
  • வசதிகள்: அலுவலக இடங்கள், சந்திப்பு அறைகள், இலகுரக தொழில்துறை அலகுகள்
  • சிறப்பு பகுதி: பெண்கள் தலைமையிலான வணிகங்களுக்கான பிரத்யேக பகுதி

DP World இன் குழுமத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுல்தான் அகமது பின் சுலாயம், இந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாகவும், இந்த திட்டத்தை “உலகளாவிய நுகர்வோருக்கு இந்திய தயாரிப்புகளுக்கான காட்சிப்படுத்தல்” என்றும் “இது அரசாங்க ஒத்துழைப்பு நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாரத் மார்ட் ஆனது ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து 11 கி.மீ தொலைவிலும், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கும். இது எதிஹாட் ரயில் சேவை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஏற்றுமதியாளர்கள் 150 கடல்சார் இடங்களுடனும் மற்றும் விமானம் வழியாக உலகளவில் 300க்கும் மேற்பட்ட நகரங்களுடனும் இணைப்பு வசதியை பெற முடியும்.

ADVERTISEMENT

இதன் மூலம் துபாயில் வர்த்தகம் செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக MSMEகள் (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) அமீரகம் மட்டுமல்லாமல் கண்டங்கள் முழுவதும் இந்திய தயாரிப்புகளை வேகமாகவும் திறமையாகவும் நகர்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel