ADVERTISEMENT

UAE: சிட்டி பஸ் இணைப்பை அதிகரிக்க புதிய ‘ஆரஞ்சு வழித்தடம்’ அறிமுகம்… ராஸ் அல் கைமா எமிரேட் அறிவிப்பு..!!

Published: 23 Apr 2025, 9:07 AM |
Updated: 23 Apr 2025, 9:08 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமா எமிரேட்டில் ‘Orange Route’ என்ற புதிய நகரப் பேருந்து வழித்தடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராஸ் அல் கைமா எமிரேட்டின் லட்சிய போக்குவரத்து மாஸ்டர் பிளான் 2030 இன் ஒரு பகுதியாக,  ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையத்தால் (RAKTA) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வழித்தடம், எமிரேட் முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதையும் எமிரேட்டின் பொதுப் போக்குவரத்து நெட்வொர்க்கை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்று கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இது தொடர்பாக RAKTA வெளியிட்ட விபரங்களின் படி, சுமார் 13 கிலோமீட்டர்களுக்கு மேல் நீண்டுள்ள ஆரஞ்சு வழித்தடம், அல் நக்கீல் பகுதியிலிருந்து அல் தைத் சவுத்தில் உள்ள பிரதான பேருந்து நிலையம் வரை செல்கிறது மற்றும் நகரத்தின் பல முக்கிய இடங்களை இணைக்கிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும், இது ராஸ் அல் கைமாவில் உள்ள உள் பொது போக்குவரத்து நெட்வொர்க்கின் மொத்த நீளத்தை 99 கிலோமீட்டராகக் கொண்டுவருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. திறமையான, அணுகக்கூடிய மற்றும் பயனர் நட்பு பொது போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கான RAKTAவின் இலக்கை இந்த அறிமுகம் ஆதரிக்கிறது. இந்தப் புதிய வழித்தடத்தின் மூலம், அனைவருக்கும் ஏற்ற மலிவு மற்றும் வசதியான சேவைகள், பொது போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

RAKTAவின் படி, ஆரஞ்சு வழித்தடம் ராஸ் அல் கைமாவின் நான்கு முக்கிய நகர பேருந்து வழித்தடங்களையும் இணைக்கிறது, இது நெட்வொர்க் முழுவதும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது. பயண நேரங்களைக் குறைப்பதற்கும் தினசரி பயணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் ஒரு வழி பயணம் தோராயமாக 25 முதல் 30 நிமிடங்கள் வரை எடுக்கும், பின்வரும் எட்டு முக்கிய இடங்களில் நிறுத்தப்படும்:

ADVERTISEMENT
  1. அல் நக்கீல்,
  2. ஜுல்பர் டவர்ஸ்,
  3. அல் சதஃப் ரவுண்டானா,
  4. டிரைவிங் ஸ்கூல்,
  5. போஸ்ட் ஆஃபீஸ்,
  6. கிளாக் ரவுண்டானா,
  7. ஃபிளமிங்கோ பீச்
  8. சவுத் அல் தைத்தில் உள்ள மெயின் பஸ் நிலையம்.

இந்த சேவை காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை ஒரு நாளைக்கு 20 பயணங்களை இயக்கும். ஒவ்வொரு பயணத்திற்கும் 8 திர்ஹம் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு வழித்தடத்தின் துவக்கம், பொது போக்குவரத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான RAKTAவின் நீண்டகால முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிபதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel